டவிட்டரில் நீண்ட பதிவுகள்; சோதனை நிலையில் 'Notes'

ட்விட்டர் நிறுவனம் "Notes" எனும் புதிய அம்சத்தை சோதனை செய்து வருவதாக அறிவித்துள்ளது.

நேற்றையதினம் (22) இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள அந்நிறுவனம், பயனர்கள் இதன் மூலம் கட்டுரை போன்ற நீண்ட பதிவுகளை டைப் செய்து, ட்விட்டர் ஊடக தளத்திலும் வெளியேயும் இணைப்பாகப் பகிர முடியும்

கடந்த வருடம் ட்விட்டர் நிறுவனம் கொள்வனவு செய்த செய்தித்தள நிறுவனமான Revue என்பதே, தற்போது "Notes" அம்சமாக ட்விட்டரில் இணைக்கப்பட்டு தற்போது குறிப்பிட்ட சில எழுத்தாளர்களுக்கு இவ்வசதி சோதனைக்காக விடப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

 

ஆரம்ப காலத்தில் ட்விட்டரில் 140 எழுத்துகளைக் கொண்ட இடுகைகளையே பகிர முடியும் எனும் மட்டுப்பாடு காணப்பட்டது. ஆயினும் கடந்த 2017 இல் 280 எழுத்துகளைக் கொண்ட இடுகைகளை என அதன் மட்டுப்பாடு தளர்த்தப்பட்து.

ஆயினும், ட்விட்டர் இடுகைகளை திருத்தும் (edit) வசதியை பெரும்பாலான பயனர்கள் கோரி வரும் நிலையில், குறித்த அம்சத்தை சோதனை செய்யவுள்ளதாக கடந்த ஏப்ரலில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

Forbes சஞ்சிகையின் கருத்துப்படி டெஸ்லா (TSLA) நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரியும், உலகின் மிகப் பெரிய பணக்காரருமான எலன் மஸ்க், 44 பில்லியன் டொலர்களுக்கு ட்விட்டர் நிறுவனத்தை கொள்வனவு செய்வது தொடர்பான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...