மனித உரிமை ஆணைக்குழுவினால் IGP இன்று விசாரணைக்கு அழைப்பு

பல சிரேஷ்ட அதிகாரிகளுக்கும் அழைப்பு

ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் பொலிஸ் மாஅதிபர் மற்றும் பல சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

அதற்கமைய, இன்று (22) காலை 11 மணிக்கு இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் விசாரிப்பதற்காக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அக்குழுவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணைக்களுக்கமைய, பொலிஸ் மாஅதிபர் சி.டி. விக்ரமரத்ன, மத்திய மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர், மத்திய மாகாணத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபர், கேகாலை மாவட்ட சிரேஷ்ட பொலிஸட அத்தியட்சகர், கேகாலை மற்றும் ரம்புக்கனை பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...