சப்புகஸ்கந்த நிலையத்தை ஜனவரி 26இல் மீண்டும் திறக்க நடவடிக்கை

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை எதிர்வரும் ஜனவரி மாதம் 26 ஆம் திகதி மீள ஆரம்பிக்க தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இம்மாதம் 23ஆம் திகதி கச்சா எண்ணெய் தொகுதி இலங்கைக்கு வரவுள்ளதாக எரிசக்தி அமைச்சின் செயலாளர் கே.டி.ஆர்.வோல்கா தெரிவித்துள்ளார்

இதனை அடுத்து சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நாட்டில் நிலவும் அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக கச்சா எண்ணெயை கொள்வனவு செய்வதில் ஏற்பட்ட சிரமங்கள் காரணமாக சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஜனவரி 03 ஆம் திகதி தற்காலிகமாக மூடப்பட்டது.

எவ்வாறாயினும், சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டாலும் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என எரிசக்தி அமைச்சு உறுதியளித்துள்ளது.


Add new comment

Or log in with...