அசாத் சாலியின் மனு விசாரணையிலிருந்து நீதியரசர் விலகல்

அசாத் சாலி தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு மீதான விசாரணையிலிருந்து உயர் நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்.டி. நவாஸ் விலகியுள்ளார்.

தன்னை குற்றப்புலனாய்வு விசாரணையிலிருந்து விடுவிக்க உத்தரவிடக் கோரி அசாத் சாலி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்திருந்தார்.

இம் மனு விசாரணைக்கு வந்தபோது தனிப்பட்ட காரணங்களால் மனுமீதான பரிசீலனையிலிருந்து தாம் விலகுவதாக நீதியரசர் ஏ.எச்.எம்.டி. நவாஸ் அறிவித்துள்ளார்.

இதனையடுத்து அசாத் சாலி தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு மீதான பரிசீலனை ஓகஸ்ட் 27 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தமைக்காக அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இதனையடுத்து பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச உடன்படிக்கைச் சட்டத்தின் கீழ் அசாத் சாலிக்கு எதிராக குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன.


Add new comment

Or log in with...