சிறுவர்களை வேலைக்கமர்த்தலை தடுக்க விசேட கட்டளைச் சட்டம்

விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடிவு

 

சிறுவர்களை வீட்டு வேலைகளுக்கு அமர்த்துவதை தடுக்கும் வகையில் விசேட கட்டளைச் சட்டங்களை விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை உயரதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதற்கிணங்க 18 வயதுக்குக் குறைவான பிள்ளைகளை வேலைக்கு அமர்த்துவதை தடுக்கும் வகையில் அதற்கான வேலைத் திட்டம் அமைய உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, சிறுவர்களுக்காக தனியான நீதிமன்றங்களை உருவாக்குதல் மற்றும் பல்வேறு துஷ்பிரயோகங்களுக்கும் பாதிப்புகளுக்கும் உள்ளாகும் பிள்ளைகளின் சாட்சியங்களை வீடியோ தொழில்நுட்பம் மூலம் பெற்றுக் கொள்வது தொடர்பிலும் புதிய சட்டங்களை கொண்டு வருவதற்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதற்கிணங்க அனைத்து மாகாணங்களிலும் சிறுவர்களுக்கான தனியான நீதிமன்றங்களை உருவாக்குவதற்கு நீதி சேவை ஆணைக்குழு யோசனைகளை முன்வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...