2,50,000 ஆசிரியர்களுக்கு அடுத்த வாரம் முதல் தடுப்பூசி

- கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அறிவிப்பு

பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு முன்பதாக அனைத்து ஆசிரியர்களுக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்க தீர்மானித்துள்ளதாக கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அடுத்த வாரம் முதல் அதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுமென்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதுமுள்ள அனைத்து பாடசாலைகளிலும் 02 இலட்சத்து 42 ஆயிரம் ஆசிரியர்கள் கற்பிக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான இரண்டு தடுப்பூசிகளையும் ஒதுக்கி முறையாக அதனை செலுத்தும் நடவடிக்கைகளுக்கென விசேட வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படுமென தெரிவித்துள்ள அமைச்சர், பாடசாலைகளை கல்வி நடவடிக்கைகளுக்காக விரைவில் திறப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...