30 இலட்சத்தை அண்மித்த தடுப்பூசி ​ெபற்றோர் தொகை

சுகாதார அமைச்சினால் விரிவான தகவல்

நாட்டில் கொவிட்19 தடுப்பூசி இதுவரை 29,78,245 பேருக்கு முதலாவது டோஸ் வழங்கப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இத் தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய, நேற்று முன்தினம் (03) வரை 34,915 பேருக்கு சீன தயாரிப்பான சைனோபாம் (sinopharm) தடுப்பூசியின் முதலாவது டோஸ் வழங்கப்பட்டுள்ளது.சைனோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் நேற்று 28,071 பேருக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இதேவேளை, இதுவரை 384,047 பேருக்கு கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் இதுவரை 1,14,795 பேருக்கு ஸ்புட்னிக் வீ தடுப்பூசியின் முதலாவது டோஸ் வழங்கப்பட்டு ள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.இலங்கையில் அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டுள்ள சீன பிரஜைகள் 2,865 பேருக்கு சைனோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் வழங்கப்பட்டுள்ள துடன் 2,435 பேருக்கு இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 


Add new comment

Or log in with...