தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம்; சபையில் சுமந்திரனும் ராகவனும் வாக்குவாதம்

அரசியல் கைதிகள் விவகாரத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரனுக்கும் சுரேன் ராகவனுக்குமிடையில் நேற்று பாராளுமன்றத்தில் சூடான கருத்து மோதல்கள் நடைபெற்றன.

அரசாங்க உறுப்பினராக இருந்தபோதிலும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்த சுரேன் ராகவன் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லையென சுமந்திரன் குற்றம் சாட்டினார்.

அதனைத்தொடர்ந்து, கைதிகள் விடுவிக்கப்படுவதை உறுதி செய்ய சுமந்திரன் எடுத்த நடவடிக்கைகள் தொடர்பில் குறித்து சுரேன் ராகவன் கேள்வியெழுப்பினார்.

இதனையடுத்து இந்த விடயம் தொடர்பாக இருவருக்குமிடையில் கடுமையான வாக்குவாதங்கள் நடைபெற்றதையடுத்து, சுமந்திரன் ஒரு கட்டத்தில் சுரேன் ராகவனை கூச்சலிடவேண்டாமென்றும் நிறுத்துமாறும் கூறினார்.

அதேநேரம், தமிழ் கைதிகளின் விடுதலை விடயத்தில் அரசியல் நாடகம் நடத்த வேண்டாமென்றும் சுமந்திரன் அரசாங்கத்திடம் கூறினார்.

அத்தோடு கைதிகளை உடனடியாக விடுவிக்குமாறும் அவர் அரசாங்கத்தை வலியுறுத்தினார்.

மேற்பட்ட அரசியல் கைதிகளை விடுவிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு முடிந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்துச் செய்ய வேண்டுமென்றும் அவர் இதன்போது கோரிக்கை விடுத்தார்.


Add new comment

Or log in with...