வடக்கு, கிழக்கில் சில இடங்கள் குறைந்த பாதிப்பு பிரதேசங்களாக அடையாளம்

வடக்கு, கிழக்கில் சில இடங்கள் குறைந்த பாதிப்பு பிரதேசங்களாக அடையாளம்-COVID19 LOW Risk High Risk Areas-Sri Lanka Map

- மாந்தை கிழக்கு, வெலிஓயாவில் ஒருவரும் அடையாளம் காணப்படவில்லை
- அவரவர் சொந்த மற்றும் பிரதேசங்களின் பாதுகாப்பு அவரவர் நடவடிக்கையில் தங்கியுள்ளது

சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவினால் இலங்கையில் அதிக ஆபத்து மிக்க கொரோனா வைரஸ் பரவல் பிரதேசங்கள் அடையாளமிடப்பட்டு, வரைபடமாக வெளியிடப்பட்டுள்ளது.

மே 08 ஆம் திகதியுடன் நிறைவடையும் கடைசி 14 நாட்களுக்குள் எடுக்கப்பட்ட பதிவுகளின் அடிப்படையில் குறித்த இலங்கைப்பட வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, மாந்தை கிழக்கு, வெலிஓயா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் ஒருவரும் அடையாளம் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இது தவிர, கிழக்கு மாகாணத்தில் அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை, நிந்தவூர், இறக்கமாம், கோரளைப்பற்று தெற்கு, நாவிதன்வெளி, களுவாஞ்சிக்குடி, வெல்லாவளி, பட்டிப்பளை, ஆரையம்பதி, வவுணதீவு, காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள், குறைந்த பாதிப்பு கொண்ட, சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

அத்துடன், வட மாகாணத்தில் ஊர்காவற்றுறை, காரைநகர், சங்கானை, பளை, மருதங்கேணி, அடம்பன், மடு, முசலி உள்ளிட்ட சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகள், குறைந்த பாதிப்பு கொண்ட, சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

குறித்த சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளில் மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் அடையாளம் காணப்பட்டுள்ள மற்றும் பதிவான தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் குறித்த வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...