கேகாலை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலயத்தில் 155 பேருக்கு கொரோனா

- இதுவரை 5,362 தொற்றாளர்கள்

கேகாலை  மாவட்டத்தில் கொரோ னா தொற்றாளர்களின் எண்ணிக்கை 5362ஆக அதிகரித்துள்ளது.

இவற்றில் அதிக தொற்றாளர்கள் தெஹியோவிட்ட சுகாதார அதிகாரி பிரிவில் இனம்காணப்பட்டுள்ளனர்.

இப்பிரிவில் மாத்திரம் 960பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் நேற்றுமுன்தினம் (12 ஆம் திகதி) மாத்திரம் 24 மணித்தியாலயத்தில் மாவட்டத்தில் 155 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதுவரை இனங்காணப்பட்ட தொற்றாளர்களில் கேகாலை சுகாதார அதிகாரி பிரிவில் 758 பேரும், ரம்புக்கன சுகாதார அதிகாரி பிரிவில் 429 பேரும், மாவனல்லை சுகாதார அதிகாரி பிரிவில் 407 பேரும், அரனாயக்க சுகாதார அதிகாரி பிரிவில் 325 பேரும், கலிகமுவ சுகாதார அதிகாரி பிரிவில் 376பேரும், வரக்காபொல சுகாதார அதிகாரி பிரிவில் 652 பேரும், புளத்கோபிட்டிய சுகாதார  அதிகாரி பிரிவில் 325பேரும், ருவன்வெல்ல சுகாதார அதிகாரி பிரிவில் 410 பேரும், எட்டியாந்தோட்டை சுகாதார அதிகாரி பிரிவில் 355 பேரும், தெஹியோவிட்ட  சுகாதார அதிகாரி பிரிவில் 960பேரும், தெரணியகலை சுகாதார அதிகாரி பிரிவில் 365பேரும்  உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய 5362 பேர் இதுவரை தொற்றாளர்களாக இனம்காணப்பட்டுள்ளனர். இதில் 4303பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை கேகாலை மாவட்டத்தில் 47கொரோனா மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

தற்பொழுது 6910பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கேகாலை மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயம்  அறிவித்துள்ளது.

கடந்த 24 மணித்தியாயத்தில் அடையாளங்காணப்பட்ட 155 நோயாளர்களில் கேகாலை 05, ரம்புக்கன 28, மாவனல்லை 10, அரனாயக்க 04, கலிகமுவ 06, வரக்காபொல 13, புளத்கோபிட்டிய 23, ருவன்வெல்ல 10, எட்டியாந்தோட்டை 15, தெஹியோவிட்ட 18, தெரணியகலை 23 பேர் உள்ளடங்குகின்றனர்.

அவிசாவளை நிருபர்


Add new comment

Or log in with...