"எனது கிரீடத்தை மீள வழங்கத் தயார்"

"எனது கிரீடத்தை மீள வழங்கத் தயார்"-Ready to Hands Over the Crown-Mrs World Caroline Jurie

"அனைத்து போட்டியாளர்களுக்கும் சம அந்தஸ்தையே எதிர்பார்த்தேன்"
- திருமதி உலக அழகி கரோலின் ஜூரி அறிவிப்பு

தனது கிரீடத்தை மீள வழங்கத் தயாராகவுள்ளதாக, திருமதி உலக அழகி கரோலின் ஜூரி தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ சமூக வலைத்தளங்கள் மூலம் வீடியோ 7 ½ நிமிட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற திருமதி இலங்கை அழகிப் போட்டியில் இடம்பெற்ற சர்ச்சையை அடுத்து, கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள அவர், இன்றையதினம் (09) குறித்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

குறித்த வீடியோவில், தான் ஒரு போதும் ஒருவர் பக்கம் சார்ந்து அல்லது தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கு அமைய செயற்படவில்லை எனத் தெரிவித்துள்ள அவர், தான் ஏனைய போட்டியாளர்களுக்கும் நியாயமானதும் சம அந்தஸ்தும் கிடைக்க வேண்டும் என்பதை மாத்திரம் நோக்கமாகக் கொண்டு செயற்பட்டதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே இக்கிரீடத்தை மீண்டும் வழங்க தயாராகவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன், பெண்ணொருவருக்கு அவசியமானது, ஒரேயொரு நியாயமான சந்தர்ப்பமொன்றைத் தவிர வேறெதுவும் இல்லை என கூறி குறித்த வீடியோவை அவர் நிறைவு செய்துள்ளார்.


Add new comment

Or log in with...