அண்டார்க்டிகாவில் லண்டன் நகர் அளவுக்கு பாரிய வெடிப்பு

அண்டார்க்டிகாவில் இருந்து பிரம்மாண்ட பனிப்பாறை ஒன்று இரண்டாகப் பிளந்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஆய்வு நடத்திய பிரிட்டிஷ் அண்டார்க்டிக் சர்வே அமைப்பினர், தற்போது உடைந்துள்ள பனிப்பாறை சுமார் ஆயிரத்து 270 சதுர கிலோ மீற்றர் பரப்புக் கொண்டது என்று குறிப்பிட்டுள்ளனர்.

தற்போது இந்தப் பாறையில் 20 கிலோ மீற்றர் நீளத்திற்கு வெடிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இந்தப் பாறை அளவு லண்டனை விட பெரிதாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த பாறையில் பாரிய வெடிப்பு ஒன்று உருவாகி வருவது பற்றி ஒரு தசாப்தத்திற்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. பனிப்பாறையின் நகர்வை செயற்கைக் கோள் மூலம் கண்காணித்து வருவதாகவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

பனிப்பாறைகள் அண்டார்க்டிகாவில் இருந்து பிளவுண்டு கடலில் கலப்பது இயற்கையாக நிகழ்கின்றபோதும் காலநிலை மாற்றத்தால் இந்த செயற்பாட்டின் வேகம் அதிகரித்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் தற்போதைய நிகழ்வுக்கு காலநிலை மாற்றம் முக்கிய பங்காற்றியதற்கான ஆதாரங்கள் இல்லை என்று பிரிட்டிஷ் அண்டார்க்டிக் சர்வே அமைப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.


Add new comment

Or log in with...