நிலவில் கால் தடத்தை பாதுகாக்க புதிய சட்டம்

உலகில் முதல்முறையாக விண்வெளியில் மனிதர்களின் அடையாளத்தை பாதுகாக்கும் வகையிலான சட்டத்தை அமெரிக்கா பிறப்பித்துள்ளது.

கடந்த 1969ஆம் ஆண்டு அப்பல்லோ 11 விண்கலம் மூலம் நீல் ஆம்ஸ்ட்ரோங் நிலவில் முதல்முறையாக தனது கால் தடத்தை பதித்தார். இந்த சாதனையின் நினைவுகளை பாதுகாக்கும் வகையில் கடந்தாண்டு அமெரிக்க பாராளுமன்றத்தில் சட்டமூலம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இதில், விண்வெளியில் முதல்முறையாக மேற்கொண்ட பயணத்தின் போது ஏற்பட்ட தடயங்கள், பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் போன்றவற்றை பாதுகாக்க வழிவகை செய்யப்பட்டிருந்தது.

இதன்படி விண்வெளியில் மனிதப் படைப்புகளை பாதுகாக்க சட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கும் முதல் நாடாக அமெரிக்கா பதிவாகியுள்ளது.

இதில் 1969 தொடக்கம் 1972 வரை அப்பல்லோ 11 பயணம் உட்பட நிலவில் தரையிறங்கிய மேலும் ஐந்து பயண இடங்களின் தடயங்கள் பாதுகாக்கப்படவுள்ளன.


Add new comment

Or log in with...