பண்டிகையில் பிரமாண்ட தள்ளுபடிகளுடன் பாரிய சலுகைகளை வழங்கும் Singer

பண்டிகையில் பிரமாண்ட தள்ளுபடிகளுடன் பாரிய சலுகைகளை வழங்கும் Singer-Singer Rolls Out Biggest Offers this Festive Season Topped with Massive Discounts

நாட்டின் முதற்தர நுகர்வோர் சாதனங்களின் விற்பனையாளரான Singer Sri Lanka PLC,  இந்த பண்டிகை காலத்தில் அதன் வாடிக்கையாளர்களை உற்சாகமூட்டும் வகையில்  நம்பமுடியாத பருவகால சலுகைகள் பலவற்றை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள Singer இன் காட்சியறை வலையமைப்புக்கு நேரடியாக வருகை தரும் மற்றும் www.singer.lk என்ற இணையத்தளம் ஊடாக பொருட்களை கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்கள் தற்போது 25% வரையான விலைக்கழிவினைப் பெற்றுக் கொள்ள முடியுமென்பதுடன், தெரிவு செய்ய்யப்பட்ட பொருட்களுக்கு 3 வருடம் வரையான பிரத்தியேக உத்தரவாதமும் வழங்கப்படுகின்றது.

நாடு முழுவதும் உள்ள காட்சியறை வலையமைப்பு மூலம் Singer தனது வாடிக்கையாளர்கள் தங்களின் அன்புக்குரியவர்களுக்கு எல்லையற்ற அளவிலான தயாரிப்புகளை பரிசாக வழங்க ஈடிணையற்ற பரிசு வவுச்சர்களையும் வழங்குகிறது. இந்த பரிசு வவுச்சர்கள் வெவ்வேறு பெறுமதியில் கிடைப்பதுடன், இவை  பரிசுகளை பெறுபவர்களே தமக்கான பரிசினை தெரிவு செய்ய வேண்டும் என விரும்பும் பரிசினை வழங்குபவர்களுக்கு சிறந்ததாகும்.

இந்த பண்டிகைக் காலத்தில், வட்டியில்லாத கொடுப்பனவு திட்டங்களுடன், தொலைக்காட்சிகள் மீது ரூ. 30,000 வரையிலும், சலவை இயந்திரங்களுக்கு ரூ. 26,000 வரையிலும் தள்ளுபடியை பெற்றுக்கொள்ள முடியும். இவற்றுக்கு மேலதிகமாக, எயார் கண்டிஷனர்களுக்கு ரூ. 15,000 வரையான தள்ளுபடி  மற்றும் வட்டி இல்லாத கட்டண திட்டங்கள், சுடுநீர் ஷவர்களுக்கு 10% வரை தள்ளுபடி மற்றும் சமையல் சாதனங்களுக்கு  25% வரை தள்ளுபடியையும் Singerர் வழங்குகின்றது.

தெரிவு செய்யப்பட்ட தளபாடங்களுக்கு 20% வரையான தள்ளுபடி மற்றும் கடனட்டைகளுக்கு 60 மாதங்கள் வரையான தவணைக் கொடுப்பனவு திட்டங்கள் மற்றும் 18 மாதங்கள் வரையான இலகு கொடுப்பனவு திட்டங்களும் வழங்கப்படுகின்றன. குளிர்சாதன பெட்டிகளுக்கு, வாடிக்கையாளர்கள் தள்ளுபடிகள் மற்றும் வட்டி இல்லாத கட்டண திட்டங்கள் இரண்டையும் பெற்றுக்கொள்ள முடியும். இவற்றோடு டிஜிட்டல் தயாரிப்புகளுக்கு பல சலுகைகளையும் Singer வழங்கி வருகின்றது. இதன்படி தெரிவு செய்யப்பட்ட Samsung மொபைல்களுக்கு ரூ. 50,000 தள்ளுபடி மற்றும் Dell i3 மடிக்கணினிகளுக்கு இலவச மூன்று ஆண்டு பிரத்தியேக உத்தரவாதம் உட்பட பல சலுகைகளும்வழங்கப்படுகின்றன.

Sony, Samsung, Panasonic, Kenwood, Huawei, Dell, Beko, Sisil  மற்றும் Asus போன்ற உயர் தர வர்த்தகநாமங்களுக்கான தயாரிப்புகளுக்கான இல்லமாக Singer உள்ளது. Singerள் வலையமைப்பின் கீழ் உள்ள எண்ணற்ற தவறவிட முடியாத உயர் தரமான வர்த்தகநாமங்கள் வாடிக்கையாளர்கள் நம்பகமான உத்தரவாதங்களுடன் கூடிய பொருட்களைத் தடையின்றி தெரிவு செய்ய உதவுகிறது.

Singer இன் பருவகால சலுகைகள் தொடர்பில் கருத்து தெரிவித்த Singer Sri Lanka PLC இன் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் ஷனில் பெரேரா, “Singer இன் வருடாந்த ஆண்டிறுதி பண்டிகைக்காலமானது இலங்கையில் மிகப் பாரிய கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு சலுகைகளுக்கு புகழ் பெற்றது. Singer இந்த பருவ காலத்தில் பண சலுகைகளுக்கு மட்டும் சிறந்த மதிப்பை வழங்குவதில் கவனம் செலுத்துவது மட்டுமல்லாமல், வாடிக்கையாளர்களின் மன அமைதியை உறுதி செய்யும் மிக உயர்ந்த தயாரிப்பு தரத்தையும் வழங்குகிறது.

இந்த ஆண்டு, எங்கள் புதிய தோற்றத்துடன் கூடிய www.singer.lk இணையத்தளமானது இலத்திரனியல் வர்த்தக்க கொள்வனவாளர்களுக்கு வசதியளிப்பதுடன், கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் ஒன்லைன் ஒர்டர்களில் பாரிய அதிகரிப்பு நாங்கள் தயாராக உள்ளோம். பருவத்தின் நல்லெண்ணத்தை எங்கள் வாடிக்கையாளர்களுக்கு பரப்பும் ஆண்டின் சிறப்பு நேரம் இதுவென்பதுடன், எங்கள் நாடு முழுவதும் உள்ள காட்சியறைகள் மற்றும் எமது ஒன்லைன் ஷொப்பிங் தளமான www.singer.lk இணையத்தளம் ஊடாகவும் Singer இடமிருந்து மிகப்பெரிய பருவகால சலுகைகளை பெற்று மகிழ அனைவரையும் அழைக்கிறோம்," என்றார்.

www.singer.lk இணையத்தளம் வாடிக்கையாளர்களுக்கு வீட்டிலிருந்து பொருட்களை கொள்வனவு செய்யவும், அவற்றை வீட்டு வாசலுக்கே பெற்றுக் கொள்ளும் சௌகரியத்தை வழங்கும் அனைத்துக்குமான  இலத்திரனியல் வணிக தளமாகும். கிரெடிட் / டெபிட் அட்டைகள் மற்றும் மிக முக்கியமாக, வட்டி இல்லாத கட்டணத் திட்டங்களை உள்ளடக்கிய கட்டண தெரிவுகள் மூலம் Singer வாடிக்கையாளர்களுக்கு வசதியளிக்கின்றது.

இலங்கையின் நுகர்வோர் சாதங்களின் சந்தையில் முதலிடத்தைக் கொண்டுள்ள Singer Sri Lanka PLC பல வகையான உயர் தரமான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வர்த்தகநாமங்களை நாட்டில் வளர்ந்து வரும் நுகர்வோருக்கு வழங்குவதில் பெயர் பெற்றது. அதன் 430 இற்கும் மேற்பட்ட Singer விற்பனை நிலையங்கள், உறுதியான விநியோகஸ்தர் வலையமைப்பு மற்றும் இலத்திரனியக் தளம் (www.singer.lk) , ஆகியவற்றுடன் 600 இலத்திரனியல் சாதனங்கள், 1200 வீட்டு உபகரணங்கள் மற்றும் 50க்கும் மேற்பட்ட சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற வர்த்தநாமங்களைக் கொண்டுள்ளது.


Add new comment

Or log in with...