நிவாரணம் இன்றி வெல்லம்பிட்டி மக்கள் திண்டாட்டம்

தற்போதைய கொரோனா சூழ் நிலையில் வெல்லம்பிட்டி பிரதேசத்தில் உள்ள ஹித்தம்பகுவ, லன்சியாவத்த, மெகட கொலன்னாவ உள்ளிட்ட பல பகுதி மக்கள், நிவாரண உதவிகள் கிடைக்கவில்லையென கவலை தெரிவிக்கின்றனர்.

கடந்த இரண்டுமாத காலத்திற்கும் மேலாக பொலிஸ் ஊரடங்குச் சட்டம் மற்றும் தனிமைப்படுத்தல் போன்றவற்றுக்குள்ளான அந்த மக்களுக்கு கொலன்னாவ பிரதேசச் செயலகமோ அல்லது கொலன்னாவ நகர சபையோ எந்தவித உதவிகளையும் வழங்க வில்லை என்றும் குறிப்பாக ஹித்தம்பகுவ, மெகட கொல்னானவ, சங்சியாவத்தை பகுதிகளுக்கு பள்ளிவாசல்கள்கூட உதவவில்லை என அந்த மக்கள் குறை கூறுகின்றனர்.

கொரோனா நோய் காரணமாக பலர் தமது சுய தொழில் மற்றும் ஏனைய தொழில்களையும் இழந்துள்ளதாக அந்த மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த மக்களுக்கு முடியுமான உதவிகளை அரசாங்கம் உடனடியாக செய்ய வேண்டும் என அந்த மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். ஐயாயிரம் ரூபா கொடுப்பனவுகூட பல போராட்டங்களுக்கு மத்தியில் பெற்றதாகவும் சிலருக்கு அந்த தொகையும்கூட கிடைக்கவில்லை என்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் கவனம் செலுத்தி பட்டினியால் வாடும் அந்த மக்களுக்கு உதவிகளை வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றனர்.

ஏ.எஸ்.எம்.ஜாவித்


Add new comment

Or log in with...