கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்று 257 ஆக அதிகரிப்பு

கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்று 257 ஆக அதிகரிப்பு-257 COVID19 Cases Identified in Eastern Province-A-Lathaharan

- அக்கரைப்பற்று சுகாதார வைத்திய பிரிவில் 90 பேர் அடையாளம்

கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்று 257 ஆக அதிகரித்துள்ளதாக, கிழக்கு மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் டாக்டர் ஏ. லதாகரன் தெரிவித்தார்.

அக்கரைப்பற்று சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் 90 பேரும், அட்டாளைச்சேனை சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் 08 பேரும், இறக்காமம் சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் 05 பேரும், திருக்கோவில் சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் 03 பேரும், ஆலையடிவேம்பு சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் 02 பேரும், சாய்ந்தமருது சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் 01 நபருமாக மொத்தம் 109 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும், இவர்கள் அக்கரைப்பற்று பொதுச் சந்தையுடன் தொடர்புடையவர்களெனவும் அவர் தெரிவித்தார்.

அம்பாறை சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 11 பேரும், கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 138 பேரும், மட்டக்களப்பு சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 92 பேரும், திருகோணமலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 16 பேரும், அடங்கலாக 257 பேருக்கு கொரோனாத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதுவரை அம்பாறை சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 1,361 பேருக்கும், கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 3,400 பேருக்கும், மட்டக்களப்பு சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 5,287 பேருக்கும், திருகோணமலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 1,406 பேருக்குமாக மொத்தம் கிழக்கு மாகாணத்தில் 11 ஆயிரத்தி 454 பேருக்கு பீ.சீ.ஆர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

பாலமுனை கொரோனா சிகிச்சை நிலையத்தில் 80 பேரும், பதியத்தலாவ கொரோனா சிகிச்சை நிலையத்தில் 67 பேரும், காத்தான்குடி கொரோனா சிகிச்சை நிலையத்தில் 106 பேரும், கரடியனாறு கொரோனா சிகிச்சை நிலையத்தில் 105 பேருமாக மொத்தம் 358 பேர் கிழக்கு மாகாணத்தில் கொரோனா சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அக்கரைப்பற்று பிராந்தியத்தில் மேலும் கொரோனாத் தொற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் பொது மக்கள் அவதானமாக செயற்பட்டு சுகாதார பகுதியினருக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு, அவர் மேலும் தெரிவித்தார்.

(ஒலுவில் விசேட நிருபர் - எம்.எஸ்.எம். ஹனீபா)


Add new comment

Or log in with...