இலங்கையின் 75ஆவது வரவு செலவுத்திட்ட அறிக்கை இன்று பாராளுமன்றில்
2021 நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்டம், பிரதமரும், நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் இன்று (17) சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இது தொடர்பான பாராளுமன்ற அமர்வு இன்று (17) பிற்பகல் 1.40 மணிக்கு இடம்பெறவுள்ளது.
நேரடி ஒளிபரப்பு மற்றும் விபரங்களை அறிய எம்முடன் இணைந்திருங்கள்...
பிரதமரும், நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவினால் 2021 நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு (வரவு செலவுத் திட்ட உரை) முன்வைக்கப்படவிருப்பதால் பாராளுமன்றம் இன்று (17) பிற்பகல் 1.40 மணிக்கு கூடவுள்ளது.
இதன் பின்னர் மஹிந்த ராஜபக்ஷவினால் வரவு - செலவுத்திட்டம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும், இது இந்நாட்டின் 75வது வரவுசெலவுத்திட்ட அறிக்கையாக அமையும்.
Add new comment