மாடறுப்பு தடையானது முஸ்லிம் விரோத சர்வதேசத்தின் நிகழ்ச்சி நிரல்

இது எதிர்பார்த்த ஒன்றுதான் -இம்ரான் மஹ்ரூப்

மாடறுப்பு தடை என்பது அரசு பின்பற்றும் முஸ்லிம் விரோத சர்வதேச நிகழ்ச்சி நிரல் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் தெரிவித்தார்.

இலங்கையில் மாடுகளை அறுக்க தடை விதிக்க வேண்டுமென ஆளும் கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணை தொடர்பாக நேற்று கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் கூறுகையில் முஸ்லிம்களுக்கு எதிரான சர்வதேச நிகழச்சி நிரலின்படி செயல்படும் இந்த அரசு கொண்டுவர எதிர்பார்த்துள்ள இந்த சட்டம் எதிர்பார்த்த ஒன்றுதான். எதிர்காலங்களில் இதைவிட பாரிய செயற்பாடுகளை இந்த அரசு முன்னெடுக்க திட்டமிட்டுள்ளது.

அதற்கான சர்வாதிகாரத்தை பெறவே இப்பொழுது இருபதாம் திருத்த சட்டத்தை நிறைவேற்றவுள்ளனர். ஆகவே இவற்றை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பில் சிறுபான்மையினர் தீர்க்கமான முடிவுக்கு வர வேண்டும்.

 


Add new comment

Or log in with...