நியூ டயமன்ட் கப்பல் தீ; ஆராய மற்றுமொரு குழு

கல்முனை கடற் பிராந்தியத்தில் தீவிர பரிசீலனை

தீ விபத்துக்குள்ளான நியூ டயமன்ட் கப்பலை ஆராய்வதற்காக மற்றுமொரு விசேட குழுவினர் கல்முனை பகுதிக்கு வருகை தந்துள்ளனர்.

நெதர்லாந்து நாட்டை சேர்ந்த 10 பேரும் ஜேர்மன் நாட்டை சேர்ந்த ஒருவரும் உள்ளடங்கியுள்ள இக் குழுவில் மீட்பு பணிகளின் விசேட நிபுணர்களும், இடர்களை மதிப்பிடுபவர்களும், சட்ட ஆலோசகர்களும் அடங்குகின்றனர்.இது தொடர்பாக கடற்படை குறிப்பிட்டுள்ளதவது,நியூ டயமன்ட் கப்பலில் தீ முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தது. எனினும் கப்பலில் இருந்து அதிக உஷ்ணம் வெளியேறுவதால் இரசாயன பொருட்களையும் நீரையும் பயன்படுத்தி வெப்பத்தை தணிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கப்பலில் மீண்டும் அதிகளவில் தீ பரவாமல் இருப்பதை தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுகிறது. எனினும் கப்பல் தற்போது காணப்படும் சங்கமன்கண்டியில் இருந்து 30 கடல்மைல் தொலைவில் வீசும் பலத்த காற்று காரணமாகவும் கப்பலின் உள்பகுதியில் காணப்படும் அதிக உஷ்னம் காரணமாகவும் மீண்டும் தீ பரவ ஆரம்பித்துள்ளது.

எனவே தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருகிறது என கடற்படை உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பாறுக் ஷிஹான்


Add new comment

Or log in with...