Monday, August 17, 2020 - 10:47pm
ஜனாதிபதி சடடத்தரணி அலி சப்ரி இன்று (17) நீதியமைச்சில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
இதன்போது, தொடம்பஹல சந்திரசிறி தேரர், கம்புருகமுவே வஜிர தேரர், முருத்தட்டுவே ஆனந்த தேரர், பேராசிரியர் மெடகொட அபயதிஸ்ஸ தேரர், பெங்கமுவே நாலக நாயக்க தேரர் மற்றும் மகா சங்கத்தினர்கள், கலாநிதி ஹஸன் மௌலானா, இந்து மத குருமார்கள் ஆகியோர் மத ஆசீர்வாதங்களை வழங்கினர்.
இந்நிகழ்வில், அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, நாடாளுமன்ற உறுப்பினர் மஸ்தான், உட்பட பல அரசியல் பிரதிநிதிகள் மற்றும் நீதி அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி பியூமந்தி பீரிஸ் உள்ளிட்டோர் மற்றும் பல வழக்கறிஞர்களும் கலந்து கொண்டனர்.
Add new comment