மாணவரிடத்தில் இணையவழி கல்வி மேம்பாடு: உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு ஆலோசனை

உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் மூலமாக கல்வியாளர்கள் மற்றும் மாணவர்களை ஐ.நா சபைக்கு அழைத்துச் சென்று 'கல்வியில் புதுமை' என்ற தலைப்பில் தங்கள் கருத்தை சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான முதல்கட்ட ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு அரசு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், பன்னாட்டு கல்வியாளர்களுடன் அண்மையில் 'சூம்' செயலி மூலமாக நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் உலகத் தமிழ் வம்சாவளியினர் அமைப்பின் தலைவர் செல்வகுமார் வரவேற்புரை நிகழ்த்தினார். ஊடகப் பிரிவைச் சார்ந்த தி ​ேஜான் தன்ராஜ் இணைப்புரையாற்றினார்  

இதில் வி.ஐ.டி பல்கலைக்கழகத்தின் வேந்தர் ​ெடாக்டர் விசுவநாதன, பப்புவா நியூ கினி அமைச்சர் சசிதரன் முத்துவேல், மலேசியா முன்னாள் கல்வி அமைச்சர் டத்தோ கமலநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். 

அங்கு கல்வியாளர்கள் கலந்து கொண்டு பல்வேறு கருத்துகளை முன்மொழிந்தனர். குறிப்பாக, கல்வி என்பது ஒரு அறிவு சார்ந்த சமுதாயத்தை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல் மனிதநேயமிக்க சமுதாயமாகவும் உருவாக்குவது எப்படி, கல்வி என்பது ஒரு தியானம் போன்று தன்னை உணர்தல் வேண்டும், இனிவரும் காலங்களில் இணையவழி கல்வியின் அவசியம், அதை கிராமம் தோறும் சென்றடைய உருவாக்க வேண்டிய புதிய கட்டமைப்புகள். விவசாயக் கல்வியின் முக்கியத்துவம், அதில் உருவாக்க வேண்டிய கட்டமைப்புகள், ஒவ்வொரு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மற்றும் அது சார்ந்திருக்கின்ற கிராமங்களை எவ்வாறு கல்வி சார்ந்து தத்தெடுக்க வேண்டும், புதிய வேலைவாய்ப்புகள், நன்னெறி கல்வியை அனைத்து நிறுவனங்களும் பின்பற்ற வேண்டியதின் அவசியம், தொழில்நுட்ப ரீதியாக புதிய பாடத்திட்டத்தை உருவாக்குவதல், பெண்கள் கல்வியின் முக்கியத்துவம், அதில் ஏற்படுத்த வேண்டிய கட்டமைப்புகள், தமிழின் தொன்மை குறித்து அதிகப்படுத்த வேண்டிய அகழ்வாய்வுகள், அனைத்துத் துறை சார்ந்த சமுதாயத்திற்குப் பயனுள்ள புதிய ஆராய்ச்சி படிப்புகள், உலக தமிழ் வம்சாவளி அமைப்பின் கீழ் உலக தமிழர் உயர்கல்வி மையம் அனைத்து நாடுகளிலும் உருவாக்க வேண்டியதன் முக்கியத்துவம் போன்றன குறித்து ஆலோசிக்கப்பட்டது. 

இந்த ஆலோசனையில் கனடாவின் ஏ.சி.சி.பியின் தலைவர் ​ேஜான், உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் தலைவர் மலேசியாவைச் சேர்ந்த டான்ஸ்ரீ ​ெடாக்டர் மாரிமுத்து, ​ெடாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் டி.எஸ்.என்.சாஸ்திரி, தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழக துணைவேந்தர் ​ெடாக்டர் என்.குமார், தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் ​ெடாக்டர் பாலசுப்பிரமணியன்,பொலிஸ் துறையின் இணை இயக்குனர் ​ெடாக்டர்.எம்.ரவி ஐ.பி.எஸ், அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ​ெடாக்டர் ராஜேந்திரன், மதர் தெரசா பெண்கள் பல்கலைக்கழக துணைவேந்தர் ​ெடாக்டர் வைதேகி விஜயகுமார், தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ​ெடாக்டர் பஞ்சநாதன், பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் ​ெடாக்டர் மணிசங்கர், பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ​ெடாக்டர் காளிராஜ், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணை வேந்தர் ​ெடாக்டர் பிச்சுமணி, மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் ​ெடாக்டர் எம்.கிருஷ்ணன், அமெரிக்காவைச் சேர்ந்த ரவிநாகராஜன், கனடா முரளி ஸ்ரீநாராயணதாஸ், சிங்கப்பூரைச் சேர்ந்த ​ெடாக்டர் அ.ரா.சிவகுமாரன் ஆகியோரும் கலந்து கொண்டு உரையாற்றினார்.    


Add new comment

Or log in with...