பாதுகாப்பான நாட்டை கட்டியெழுப்பும் ஜனாதிபதியின் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு

பாதுகாப்பான நாட்டை கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி முன்னெடுத்துவரும் நிகழ்ச்சித்திட்டத்திற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக மக்கள் தெரிவித்துள்ளனர். 

பொதுஜன முன்னணியில் இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் வெற்றியை உறுதிசெய்யும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இரத்தினபுரி மாவட்டத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். இதன்போது மக்கள் தாம் முகங்கொடுக்கும் குறைகளை முன்வைத்தார்கள். 

இங்கு உரையாற்றிய ஜனாதிபதி, 

முன்மொழியப்பட்டுள்ள இரத்தினபுரி நகர அபிவிருத்தித்திட்டத்தின் மூலம் நகருக்கு ஒரு புதுத் தோற்றம் கிடைக்குமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.

இரத்தினபுரி நகர மத்தியில் ஒரு முழுமையான பஸ் தரிப்பு நிலையமும் அதன் கீழ் நிர்மாணிக்கப்படும்.  

கொழும்பு - இரத்தினபுரியை இணைக்கும் அதிவேகப் பாதை நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கிளிமலே வைத்தியசாலையை புனர்நிர்மாணம் செய்து தருமாறு மக்கள் முன்வைத்த கோரிக்கையினை அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.  

பிரேமலால் ஜயசேகர நிவித்திகல பஸ் நிலையத்திற்கு முன்னால் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பிலும் ஜனாதிபதி பங்குபற்றினார். அவிசாவலையிலிருந்து ஓப்பநாயக்க வரையிலான புகையிரத பாதைக்கு சொந்தமான காணிகளில் வதியும் சுமார் 35,000 பேருக்கு சட்ட ரீதியான உறுதிகள் இல்லாமை பற்றியும் ஜனாதிபதியிடம் தெரிவிக்கப்பட்டது.  

சுரங்க கைத்தொழிலாளர்கள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இத்துறையின் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கியவாறு அனுமதிப் பத்திரங்களை வழங்குவதை ஒரு நிறுவனத்தின் ஊடாக மேற்கொள்வதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்வதற்கு ஜனாதிபதி அவர்கள் இணக்கம் தெரிவித்தார். 


Add new comment

Or log in with...