வர்த்தமானி வெளிவந்தாலும் தமிழ், முஸ்லிம் இருவர் உள்வாங்கப்படுவர்

கிழக்கு தொல்பொருள் பாதுகாக்கும் ஜனாதிபதி செயலணி;
சிபார்சு செய்ய ஜனாதிபதி டக்ளஸிடம் கோரிக்கை

கிழக்கு மாகாணத்தில் காணப்படும் தொல்பொருள் சின்னங்களை பாதுகாக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணியில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளை இணைத்துக் கொள்வதற்காக பொருத்தமான சிறுபான்மை பிரதிநிதிகளின் பெயர்களை பரிந்துரை செய்யுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கோரியுள்ளார். 

கிழக்கு மாகாண தொல்பொருள் செயலணியின் உறுப்பினர்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் நேற்றைய தினம் வெளியாகியுள்ளது. ஏற்கனவே நியமிக்கப்பட்ட கிழக்கு தொல்பொருள் செயலணியில் சிறுபான்மையினர் யாரும் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.

இது பெரும் சர்ச்சையாக உருவாகியிருந்தது. இதை சுட்டிக்காட்டி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியிருந்தார். இந்த கடிதத்திற்கு பதிலளித்திருந்த ஜனாதிபதி, இரு சிறுபான்மையினரை இணைத்துக் கொள்வதற்கு இணக்கம் தெரிவித்திருந்தார்.  

இந்நிலையில் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர் விபரங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் நேற்றையதினம் வெளியாகியிருந்தது. 

இதையடுத்து குறித்த விடயம் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதியின் கவனத்திற்கு நேற்று கொண்டுசென்றிருந்ததை அடுத்து குறித்த பிரதிநிதிகளின் பரிந்துரைகளை தமக்கு வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரியுள்ளார்.


Add new comment

Or log in with...