மட்டக்களப்பு போதனா வீதி ஒரு வழி பாதையாக மாற்றம்

மட்டக்களப்பு போதனா ஒரு வழி பாதையாக மாற்றம்-Batticaloa Teaching Hospital Road-One Way

வீதி விபத்துக்களைத் தடுக்கும் நோக்கில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு செல்லும் பிரதான வீதி ஒருவழி பாதையாக மாற்றப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு போக்குவரத்து பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு போதனா ஒரு வழி பாதையாக மாற்றம்-Batticaloa Teaching Hospital Road-One Way

கடந்த மூன்று மாதங்களுக்கு முன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு செல்லும் பிரதான வீதி ஒருவழி பாதையாக மாற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் முன்னெடுத்தித்திருந்த வேளையில் நாட்டில் ஏற்பட்ட கொவிட் 19 தொற்றுநோய் காரணமாக அனைத்து நடவடிக்கைகளும் இடைநிறுத்தப்பட்டிருந்தன.

மட்டக்களப்பு போதனா ஒரு வழி பாதையாக மாற்றம்-Batticaloa Teaching Hospital Road-One Way

இந்நிலையில் தற்போது நாட்டின் நிலைமை வழமைக்கு திரும்பியுள்ள நிலையில் இடைநிறுத்தப்பட்டிருந்த பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு செல்லும் பிரதான வீதி உத்தியோகபூர்வமாக நேற்று முதல் ஒருவழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது

(புதிய காத்தான்குடி தினகரன் நிருபர் - எம்.எஸ். நூர்தீன், மட்டக்களப்புகுறூப் நிருபர் - ரீ.எல். ஜவ்பர்கான்)


Add new comment

Or log in with...