கொவிட்-19: மலேரியா மருந்து பயன்பாட்டை நிறுத்த அறிவுரை

கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சையில் மலேரியா எதிர்ப்பு மருந்தான ஹைட்ராக்சிகுளோரோகுயினை வழங்க வேண்டாம் என உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

அண்மைக் காலங்களில் இந்த மருந்து மூலம் நடத்தப்பட்ட சிகிச்சையில், கொரோனாவால் ஏற்படும் இறப்பு விகிதங்களை குறைக்க முடியாது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அது தெரிவித்துள்ளது.

கொரோனா சிகிச்சைக்காக ஏற்கனவே ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை எடுத்துக் கொள்பவர்கள், தங்களது மருத்துவர்களின் ஆலோசனையின் படி அதை நிறுத்தவோ அல்லது முழுமைப்படுத்திக் கொள்ளவோ செய்யலாம் என அறிக்கை ஒன்றில் உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்துள்ளது.


Add new comment

Or log in with...