கொரோனா பரிசோதனைக்கு 'ஆதார்' கட்டாயம்

 'சென்னையில் உள்ள, தனியார் ஆய்வகங்களில், கொரோனா பரிசோதனை செய்யும் போது, ஆதார் எண் கட்டாயம் பெற வேண்டும்' என, மாநகராட்சி ஆணையாளர், பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து, தனியார் ஆய்வகங்களுக்கு, சென்னை மாநகராட்சி ஆணையாளர், பிரகாஷ் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: சென்னையில், 10 அரசு ஆய்வகங்கள், 13 தனியார் ஆய்வகங்கள் உள்ளன. இதில், தனியார் ஆய்வகங்களில், கொரோனா பரிசோதனை செய்யும் போது, அந்த நபர்களிடமிருந்து, முழு தகவல்களையும் பெறுவதில்லை. இதனால், பரிசோதனைக்கு பின், பாதிப்பு ஏற்படும் நபர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. மேலும், அவர்களிடமிருந்து மற்றவர்களுக்கு தொற்று பரவும் வாய்ப்பு ஏற்படுகிறது.எனவே, கொரோனா பரிசோதனைக்கு வருவோரிடம், பெயர், தெரு பெயர், பகுதி பெயர் என, அஞ்சல் எண்ணுடன், தற்போது உள்ள வீட்டு முகவரி வாங்க வேண்டும்.

அத்துடன், 'ஆதார்' எண், அவர்களது மொபைல் எண்ணையும் வாங்க வேண்டும். மொபைல் எண்ணை வாங்கும் போது, உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும். ஆதார் எண் வழங்காத நபர்களை, முடிவுகள் வரும் வரை, தனிமைப்படுத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...