பெருந்தோட்டங்களில் உற்பத்திகளை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை

கொவிட் - 19 கொரோனா வைரஸ் தொற்று நோயால் இலங்கையின் பொருளாதாரம் மிகவும் பாதிப்படைந்துள்ளது. மீண்டும் இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக புதிய வேலைத் திட்டங்களை அரசாங்கம் அறிமுகப்படுத்த வேண்டும். அவ்வாறு புதிய வேலைத்திட்டங்கள் அறிமுகப்படுத்துவதில்  பெருந்தோட்டத்துறைக்கும் முக்கியத்தும் கொடுக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளமாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுப்பையா சதாசிவம் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதாரம் புத்துயிர் பெற ஏற்றுமதி பொருட்களை அதிகம் உற்பத்தி செய்ய வேண்டும். பெருந்தோட்டப்  பகுதிகளிலும் உற்பத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்க தோட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ தோட்ட நிர்வாகிகளுடன் நடத்திய பேச்சு வார்த்தையின் போது மேற்குறிப்பிட்ட கோரிக்கையை முன்வைத்துள்ளார். அந்த கோரிக்கையை தோட்ட நிர்வாகமும் ஏற்றுக்கொண்டுள்ளது. அவ்வாறான வேலைத்திட்டம் பெருந்தோட்ட பகுதியில் ஆரம்பிக்கப்படுமானால் பெருந்தோட்ட இளைஞர், யுவதிகளின் வேலையில்லாப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

தலவாக்கலை நிருபர்


Add new comment

Or log in with...