கொரோனாவை ஒழிக்கக் குவியும் நிதியுதவிகள்

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தாக்கத்தின் மத்தியில்  ஒட்டுமொத்த இந்தியாவும் முடங்கிக் கிடக்கிறது.

இந்த நிலையில் கொரோனாவிடம் இருந்து மக்களைக் காக்க தீவிர முயற்சிகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. இதற்காக தேவையான நிதியினை, தொழிலதிபர்கள் மற்றும் பிரபலங்கள், தனிநபர்கள் என பலரும் தங்களால் முடிந்ததை 'பி.எம் கேருக்கு' கொடுத்து உதவுமாறும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

இதையடுத்து பலரும் தங்களால் முடிந்தளவு நிதியினை வழங்கி வருகின்றனர். இதற்கிடையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன தலைவர், ஏற்கனவே தான் ஒரு சிறந்த தொழிலதிபர் மட்டும் அல்ல, சிறந்த மனிதர் என்பதையும் நிஷரூபித்திருந்தார்.  கொரோனா வைரஸ் தொற்றினை சமாளிக்க உதவும் வகையில், மும்பையில் கொரோனா வைரஸூக்கு என பிரத்தியேக மருத்துவமனையை மும்பை நிறுவியது. இது மாசுபாட்டை குறைக்க உதவுவதோடு தொற்று நோயைக் கட்டுப்படுத்தவும் உதவும் என்றும் தெரிவித்துள்ளது.

உலக பில்லியனர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் நிறுவனம்  ளுசை ர்N சுநடயைnஉந குழரனெயவழைn ர்ழளிவையட என்ற மருத்துவமனையை, கொரோனா வைரஸூக்காக 100 படுக்கைகள் கொண்ட தனி வார்ட்டாக அமைத்துள்ளது. இது மும்பை பிரஹன் மும்பை மாநகராட்சியுடன் இணைந்து (டீசihயn அரஅடியi ஆரniஉipயட ஊழசிழசயவழைn) உருவாக்கப்பட்டதாகும். சுநடயைnஉந குழரனெயவழைn ர்ழளிவையட மருத்துவமனை முழுமையாக ரிலையன்ஸ் பவுன்டேஷன் மூலம் நிதியளிக்கப்படுவதாகவும், இது தவிர இந்த மருத்துவனையில் முறையான வென்டிலேட்டர்கள், மற்றும் உயிரியல் மருத்துவ உபகரணங்கள் என பல வகையான உபகரணங்கள் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அது மட்டும் அல்ல கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை ஏற்றிச் செல்லும் அவசரகால வாகனங்களுக்கு இலவச எரிபொருளும் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பணிகள் நிறுத்தப்பட்டிருந்தாலும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தொடர்ந்து  ஊதியம் வழங்கப்படும் என்றும் ஏற்கனவே அறிவித்திருந்தது. மேலும் இந்த நெருக்கடியின் மத்தியிலும் கூட பணிகள் நிறுத்தப்பட்டிருந்தாலும், 30,000க்கும் குறைவாக சம்பளம் வாங்குபவர்களுக்கு, அதிகமான நிதித் சுமையை குறைக்க மாதம் இருமுறை சம்பளம் வழங்கப்படும் என்றும் கூறியிருந்தது.

இப்படி ஒரு நிலையில் இந்தியாவில் அதிகளவு கொரோனா தாக்கத்திற்கு ஆளான மகாராஷ்டிராவுக்கு, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 5 கோடி ஷரூபா ஆரம்ப கால நிதியினை கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்து இருந்தது. மேலும் முகக்கவசங்கள் உற்பத்தித் திறனை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் எடுத்து வருவதாகவும் சில தினங்களுக்கு முன்பு அறிவித்து இருந்தது.

நாட்டில் கொரோனாவுடன் எதிர்த்துப் போராடி வரும் சுகாதார ஊழியர்களுக்கு, தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்க உள்ளதாகவும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தெரிவித்து இருந்தது. மேலும் நாட்டில் உள்ள அனைத்து சில்லறை விற்பனை நிலையங்களும் வழக்கம் போல மக்களின் பயன்பாட்டிற்காக திறந்தே இருக்கும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

மகாராஷ்டிராவுக்கு அளித்தது போல குஜராத் மாநிலத்துக்கும் நிவராண நிதியாக 5 கோடி ஷரூபா  நிதி வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படி ஒரு நிலையில் தற்போது பிரதமரின் கொரோனா வைரஸ் நிவாரண நிதியாக 500 கோடி ஷரூபா  நிதியினை வழங்க உள்ளதாக ரிலையன்ஸ் அறிவித்துள்ளது. இது தவிர ஏராளமான மக்களுக்கு 50 இலட்சத்துக்கு அதிகமான உணவு மற்றும் பிற உதவிகளையும் செய்து வருவதாகவும், அடுத்து வரும் நாட்களுக்கும் செய்ய உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இது தவிர சுகாதார ஊழியர்களுக்கு தினசரி 1 இலட்சம் முகக்கவசங்கள் வழங்கப்பட உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இது தவிர 40 கோடி மக்களை இணைக்கும் விதமாக   வீட்டில் இருந்து பணி புரியும்   திட்டத்தினையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இவ்வாறு நாட்டில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலைக்கு மத்தியிலும் ரிலையன்ஸ் நிறுவனம் பல உதவிகளை செய்து வருகிறது. இது குறித்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, 'நாட்டில் நிலவி வரும் நெருக்கடியை இணைந்து வெல்வோம் என்று நான் நம்புகிறேன். மேலும் இந்த நெருக்கடியான நேரத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமம் உங்களுடன் உள்ளது. மேலும் தேசம் கொரோனாவுடன் எதிர்த்து போராடி வெற்றி பெற எல்லாவற்றையும் செய்யும்' என்றும் தெரிவித்துள்ளார்.

இதே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் நீட்டா அம்பானி இது குறித்து கூறுகையில், 'இந்த தொற்று நோயை எதிர்த்து போராடுவதற்கு தேசம் ஒன்று சேர வேண்டும். ரிலையன்ஸ் அறக்கட்டளை நாட்டு மக்களுடனும், பெண்களுடனும் துணையாக நிற்கும் என்று' கூறியுள்ளார். மேலும் ஆதரவற்றோருக்கு ரிலையன்ஸ் அறக்கட்டளை துணை நிற்கும் என்று நீட்டா அம்பானி தெரிவித்துள்ளார்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், மார்ச் 31, 2019ம் திகதியுடன் முடிவடைந்த காலத்தில், 6,22,809 கோடி ஷரூபா வருவாயை கொண்ட ஒரு நிறுவனமாகும். இந்தியாவின் மிகப் பெரிய தனியார் நிறுவனமான  அதன் நிகரலாபம் 39,588 கோடி ஷரூபாயாகும். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் எண்ணெய் சுத்திகரிப்பு, சில்லறை வர்த்தகம், பெட்ரோ கெமிக்கல்ஸ், டிஜிட்டல் சேவைகள், தொலைத் தொடர்பு சேவைகள் என பலவற்றிலும் கொடி கட்டி பறந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில்  சுந்தர் பிச்சை  தனது ஆல்பாபெட் நிறுவனம் 800 மில்லியன் டொலர் சுகாதார அமைப்புகள், சிறிய வணிகங்கள் மற்றும் ஊழுஏஐனு-19 வைரஸை ஒழிக்கும் முயற்சியில் உள்ள ஆராய்ச்சியாளர்களுக்கு நிதியுதவி செய்வதாக உறுதியளித்துள்ளார். இந்த 800 மில்லியன் பணமானது விளம்பர வரவுகள் மற்றும் தேடுபொறி நிறுவனமான கிளவுட் சேவைகளுக்கானது என்று அல்பாபெட் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார்.

மேலும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கும் சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கு 340 மில்லியன் மதிப்புள்ள இலவச விளம்பரங்களை அல்பாபெட் வழங்குகிறது என்றும் இந்த சிக்கலான காலங்களில் தங்கள் வணிகத்தை உறுதிப்படுத்த கூகிள் நெட்வேர்க் என்றும் ஒரு பாலமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு, அல்பாபெட் நிறுவனம் 20 மில்லியன் டொலர் தருவதாக உறுதியளித்துள்ளது. கொரோனா வைரஸை ஒழிக்க கூகிள் கிளவுட் நிறுவனத்தை எப்போதும் பயன்படுத்தலாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், அல்பாபெட் தனது நன்கொடைகளில் 10,000 டொலர்கள் வரை தனது நிறுவனத்தின் ஊழியர்கள் நிறுவனங்களுக்கும் நிதியுதவி செய்யவுள்ளது. தற்போது சுகாதார வழங்குநர்கள் எதிர்கொண்டுள்ள முகக்கவசங்கள் பற்றாக்குறையை சமாளிக்க முகக்கவசங்கள், கையுறைகள் மற்றும் பிற பாதுகாப்பு உபகரணங்களின் உற்பத்தியை அதிகரிக்க தனது இணை நிறுவனங்களுடன் சேர்ந்து திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து சுந்தர் பிச்சை வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில்,  ஒன்றாக இணைந்து நமது சமூகத்திற்கு உதவுவோம் என்றும், நமது வணிகங்கள், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் இலாப நோக்கற்ற நிறுவனங்கள் உட்பட அனைத்து சமூகங்களுக்கு நாங்கள் தொடர்ந்து உதவுவோம் என்றும் நம்முன் நிற்கும் சவாலை எதிர்கொள்வோம்' என்றும் கூறியுள்ளார்.


Add new comment

Or log in with...