கொரோனா; இத்தாலியில் அதிக உயிரிழப்புகள்

உலகளவில் 10 ஆயிரத்தை தாண்டியது உயிரிழப்பு

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு அதிகளவானோர் உயிரிழந்துள்ள நாடாக இத்தாலி மாறியுள்ளது.

இத்தாலியில் இந்நோய்த் தொற்றினால் உயிரிழந்தோர் 3,405 ஆக உயர்வடைந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

இந்நோயின் பிறப்பிடமான சீனாவிலேயே இதுவரை அதிக எண்ணிக்கையான உயிரிழப்புகள் பதிவாகியிருந்த நிலையில், தற்போது அதனை விஞ்சியவாறு இத்தாலியில் அதிக உயிர்களை கொரோனா வைரஸ் காவு கொண்டுள்ளது.

சீனாவில் இது வரை மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 3,252 ஆகும். ஹுபே மாகாணத்தில் மாத்திரம் 3,132 பேர் உயிரிழந்துள்ளனர்.

இத்தாலியில் கடந்த 24 மணிநேரத்தில் 427 மரணங்கள் சம்பவித்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை சீனாவை விட அதிகமாக மாறியுள்ளது.

ஈரானில் 1,284 பேர் இந்நோயினால் மரணமடைந்துள்ளனர்.

ஆயினும் ஹுபேயில் 58,351 பேர் உள்ளிட்ட இந்நோய் தொற்றிய 86,026 பேர் உலகளவில் குணமடைந்துள்ளர். ஈரானில் 5,979 பேரும் இத்தாலியில் 4,440 பேரும் இதில் உள்ளடங்குகின்றனர்


Add new comment

Or log in with...