27 பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் இருவர் உட்பட உயர் பொலிஸ் அதிகாரிகள் 27பேருக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் சேவையின் தேவையின் நிமித்தம் குறித்த இடமாற்றம் வழங்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் இருவர், பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் 06 பேர், பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் 06 பேர் மற்றும் பொலிஸ் பரிசோதகர்கள் 12 பேருக்கு இவ்வாறு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...