அரசியல் பழிவாங்கலை ஆராயும் குழு இன்று முதல் இயங்கும்

அரசியல் ரீதியாக பழிவாங்கப்பட்ட அரச ஊழியர்கள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட குழு இன்று (30) முதன் முறையாக கூடுகிறது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அமைச்சரவைக்கு முன்வைத்த யோசனைக்கமைய இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.  

கடந்த அரசாங்கத்தின் போது அரசியல் ரீதியாக பழிவாங்கப்பட்ட அரசு ஊழியர்கள், கூட்டுத்தாபன, கூட்டிணைக்கப்பட்ட சபைகள் என்பவற்றில் பணியாற்றும் ஊழியர்களின் முறைப்பாடுகளை ஏற்றுக்கொண்டு இந்த குழு தகுந்த நடவடிக்கை எடுக்க இருக்கிறது.  

இந்தக் குழுவின் தலைவராக அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

ஓய்வு பெற்ற செயலாளர்  மஹிந்த செனவிரத்ன, வீடமைப்பு அதிகார சபை ஓய்வுபெற்ற பிரதிப் பணிப்பாளர் ஆரியரத்ன அருமப்பெரும ஆகியோர் குழு உறுப்பினர்களாகச் செயற்படுவதுடன், குழு செயலாளராகவும் உறுப்பினராகவும் சட்டத்தரணி சத்துரிக்கா விஜேசிங்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.


Add new comment

Or log in with...