புதிய கிரகம் கண்டுபிடிப்பு

சூரிய குடும்பத்திற்கு வெளியே பூமியில் இருந்து ஆயிரத்து 300 ஒளி ஆண்டுகள் தூரத்தில் இருக்கும் ஒரு கிரகத்தை நாசாவின் டெஸ் செயற்கைக் கோள் கண்டுபிடித்துள்ளது.

பிக்டர் என்ற நட்சத்திரக் கூட்டத்தில் உள்ள இந்த கிரகம் சனி கிரகத்திற்கு இணையான அளவில் உள்ளது.

இந்த கிகரம் 2 நட்சத்திரங்களை சுற்றி வருவதாகவும், அதில் ஒன்று சூரியனை விட 15 வீதம் பெரியது என்றும் நாசா தெரிவித்துள்ளது.

இந்த கிரகத்தை கண்டுபிடிப்பதில் நாசா மையத்திற்கு பயிற்சி பெற சென்ற ஊல்ப் குகியர் என்ற பாடசாலை மாணவன் முக்கிய பங்கை வகித்துள்ளான்.

கோடிக்கணக்கான பால்வெளி மண்டலங்களில் நிறைந்துள்ள நடசத்திரக் கூட்டங்களின் வெளிச்சத்தில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை வைத்து அங்கு கோள்கள் உள்ளனவா என்பதை நாசாவின் டெஸ் செயற்கைக் கோள் கண்டுபிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...