சீன, அமெரிக்க இராஜதந்திரிகள் இலங்கைக்கு விஜயம்

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் அலிஸ் வேல்ஸ் இன்று (14) அதிகாலை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

அவர் தனது விஜயத்தின்போது அரசாங்க சிரேஷ்ட அதிகாரிகள், சிவில் சமூகப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளார்.

இதேவேளை சீன வெளிவிவகார அமைச்சர் வேங் யீ நேற்றிரவு (13) இலங்கையை வந்தடைந்துள்ளார்.

அவர் தனது விஜயத்தின்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரிய சிங்க உள்ளிட்டோருடன் கலந்துரையாடல்களை நடத்த எதிர்பார்த்துள்ளார்.


Add new comment

Or log in with...