அவுஸ்திரேலிய ஓபனில் இருந்து பியாங்கா விலகல்

அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து விலகுவதாக கனடா முன்னணி வீராங்கனை பியான்கா அன்ட்ரீஸ்கு அறிவித்துள்ளார். பியான்கா டென்னிஸ் தரவரிசையில் 6ஆவது இடத்தில் உள்ளார்.

கடந்த ஒக்டோபர் மாதம் பெண்கள் சம்பியன்ஷிப்பில் விளையாடிய போது கால் முட்டியில் காயமடைந்தார். இந்த காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளவில்லை. எனவே, அவுஸ்திரேலிய ஓபனை தவற விடுவதாக பியான்கா தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்று 19 வயதான பியான்கா வரலாறு படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

2020ஆம் ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் வரும் 20ஆம் திகதி மெல்போர்னில் ஆரம்பமாகவுள்ளது.


Add new comment

Or log in with...