நவீன கருவிகள் மற்றும் சேவைகளை வழங்கும் Huawei சேவை மையங்கள்

நவீன கருவிகள் மற்றும் சேவைகளை வழங்கும் Huawei சேவை மையங்கள்-Huawei Service Centers Offer Latest Tools and Excellent Assistance to Customers

புத்தாக்க ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான Huawei, அதன் உயர் பயிற்சிபெற்ற பணியாளர்கள் மூலமாக தற்போதைய 6 சேவை மையங்கள் ஊடாக வாடிக்கையாளர்களுக்கு ஒத்துழைப்பை வழங்கி வருகின்றது. பம்பலபிட்டிய, மஹரகம,கண்டி, அனுராதபுரம், காலி மற்றும் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள Huawei சேவை மையங்கள், இலங்கையில் உள்ள Huawei வாடிக்கையாளர்களுக்கு நவீன கருவிகள், தொழில்நுட்பங்கள், ஸ்மார்ட் சாதனங்கள் மற்றும் ஏனைய சேவைகளை தனது நன்கு அனுபவம் வாய்ந்த, தயார் நிலையில் உள்ள தொழில்நுட்ப நிபுணர்கள் ஊடாக முதற்தர சேவையை வழங்கி வருகின்றன.

இதன் நவீன வாடிக்கையாளர் சேவை மையம் 2019 டிசம்பர் 23 ஆம் திகதி மஹரகமவில்,  புதிய SI 3.5 Huawei உலகளாவிய நியமங்களுக்கு அமைவாக திறக்கப்பட்டது. B4, No: 125, Amity Shopping Complex, High-level Road, Maharagama என்ற முகவரியில் இந்த நவீன Huawei சேவை மையம் அமைந்துள்ளதுடன், இது Huawei வாடிக்கையாளர்களுக்கு மேன்மை மற்றும் ஒத்துழைப்பை வழங்குவதற்கான மிக அண்மைய சேர்ப்பாகும். மேலும்,  No:9/1/2/, Station Road, Bambalapitiya, Colombo 04 என்ற முகவரியில் அமைந்துள்ள பம்பலபிட்டிய வாடிக்கையாளர் சேவை மையம் SI 3.5 Huawei உலகளாவிய நியம சான்றுப்படுத்தலுடன், டிசம்பர் 23 ஆம் திகதி மீண்டும் திறக்கப்பட்டது.

அனைத்து Huawei சேவை மையங்களிலும் உத்தரவாதக் காலத்திற்குள் அனைத்து Huawei போன்களுக்கும் இலவச உத்தரவாத சேவை வழங்கப்படுகிறது. மேலும், உத்தரவாதக் காலம் முடிவடைந்த தயாரிப்புகளுக்கு உழைப்புக் கட்டணம் மற்றும் உதிரிப்பாக சேர்ப்பு ஆகிய பொருத்தமான கட்டணங்களுடன் சேவைகள் கிடைக்கின்றன.

Huawei Devices - உள்நாட்டு தலைமை அதிகாரியான பீட்டர் லியு, இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்," நுகர்வோர் ஸ்மார்ட்போன்களை புதுப்பித்தும், சுத்தமாகவும், பாதுகாப்பாகவும் வைத்திருக்க தேவையான நிபுணத்துவத்தை Huawei சேவை மையங்கள் வழங்குகின்றன. Huawei அங்கீகரிக்கப்பட்ட திருத்தல் சேவைகளை பயன்படுத்த வேண்டியது முக்கியமாகும்.  அங்கீகரிக்கப்படாத சேவை வழங்குநர்கள் Huawei சான்றளிக்கப்பட்ட பழுதுபார்க்கும் கருவிகளைக் கொண்டிருக்காமல் இருக்கலாம் மற்றும் தொழில் ரீதியாக பயிற்சியளிக்கப்படாமல் இருக்கலாம் அல்லது அத்தகைய சேவைகளைச் செயல்படுத்த தேவையான அறிவைக் கொண்டிருக்காமல் இருக்கலாம். எங்கள் உயர் பயிற்சி பெற்ற பணியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் இலங்கை முழுவதும் 6 இடங்களில் எங்கள் நுகர்வோருக்கு கிடைக்கின்றனர், ” என்றார்.

Huawei சேவை மையங்களில் சிறப்பு ஊக்குவிப்புகளும் தற்போது கிடைக்கின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட Huawei ஸ்மார்ட்போன்களுக்கு மின்கல மாற்றலுக்கான கழிவுகள் வழங்கப்படுகின்றன, மேலும் ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் மூன்றாவது வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் சிறப்பு சேவை நாள் ஊக்குவிப்புகளும் வழங்கப்படுவதுடன், இதன் மூலம் நுகர்வோர் தங்கள் போன்களை பெறுமதி சேர் சேவைகள் மூலம் சிறந்த நிலையில் வைத்திருக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்த பிரச்சாரம் 2019 ஜூலை 1 முதல் 2020 ஜூன் 30 வரை நடாத்தப்படுகிறது. சேவை நாள் பொதியில் போன்களுக்கான இலவச சுத்தப்படுத்தல் சேவை, தேர்ந்தெடுக்கப்பட்ட மாதிரிகளுக்கான இலவச திரை பாதுகாப்பான் பொருத்துதல் மற்றும் இலவச மென்பொருள் மேம்படுத்தல் ஆகியவை அடங்குகின்றன.

Huawei சேவை மையங்களால் வழங்கப்படும் மின்கல மாற்றீடானது, தேர்ந்தெடுக்கப்பட்ட மாதிரிகளுக்கான அசல் மின்கலங்களை குறைந்த விலையில் மாற்றுவதற்கும் கூடுதல் 90 நாள் உத்தரவாதத்தையும் வழங்குகிறது. உயர் தரமான, பாதுகாப்பான மற்றும் நம்பகமான மின்கலமானது பல ஸ்மார்ட்போன்களுக்கு ஒரு மாதம் முழுவதும் சிறப்பு தள்ளுபடி விலையில், உழைப்புக் கட்டணம் உட்பட மேலதிக கட்டணங்கள் இல்லாமல் வழங்கப்படுகிறது.

சேவை மையங்கள் ஊடாக தொடர்ச்சியான பிற சேவைகளை Huawei நுகர்வோர் அணுக முடியும்.அத்தகைய சேவைகளில் ஒன்று ‘Smart Diagnosis’ ஆகும். ‘Smart Diagnosis’ என்பது வாடிக்கையாளர்களின் தொழில்நுட்ப சிக்கல்களைக் கண்டறிந்து தீர்க்க வடிவமைக்கப்பட்ட ஒரு ஆதரவு கருவியாகும். இது எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், போனின் சிக்கல்களைக் கண்டறிந்து, சரிசெய்தல் முறையின் அதிகாரப்பூர்வ பதிப்பு, மென்பொருள் மற்றும் செட்டிங் சிக்கல்களையும் தீர்க்கும் பொருட்டு சிக்கலின் அடிப்படையில் வேறுபட்ட தீர்வுகளையும் வழங்குகின்றது. இது வன்பொருள், மென்பொருள், அழைப்புகள், வலையமைப்பு இணைப்பு, மின்னேற்றம், சிஸ்டம் செயல்திறன் மற்றும் மேலும் பல முழுமையான கண்டறிதலை வழங்குகின்றது. இந்த கண்டறிதல் செயல்முறை குறுகிய மற்றும் விரைவானது ஆனால் துல்லியமானது. இது மென்பொருளை சரிசெய்தல் மற்றும் செட்டிங் தவறுகள் மற்றும் ஒன்லைனில் தீர்க்க முடியாத சிக்கல்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் பழுதுபார்ப்பு சேவைகளை வழங்குகிறது.  வன்பொருள் தவறு கண்டறியப்பட்டால், அது சேவை நிலையத்துடன் தொடர்புகொள்ளல், துரித அழைப்பு சேவை போன்ற கூடுதல் சேவைகளை வழங்குகின்றது. இது வாடிக்கையாளர்களுக்கு, தொடர்புடைய
பராமரிப்பு அறிவு,  சரிசெய்தல் தொடர்பான மேலும்  பரிந்துரைகள் மற்றும் திறன்களை வழங்குகின்றது.

கண்டி கிளை No: 337, Peradeniya Road, Kandy, என்ற முகவரியில் அமைந்துள்ளதோடு, அனுராதபுரம் கிளை No: 514/3B, Samanala Building, Maithreepala Senanayaka Road, Anuradhapura, காலி கிளை No: 60A, Colombo Road, Kaluwella, Galle மற்றும்  யாழ்ப்பாண கிளையானது கடை இலக்கம் 20, No: 80, Municipality Complex, Kasthuriya Road, Jaffna, என்ற முகவரியிலும் அமைந்துள்ளன. Huawei சேவை மையங்கள் இலங்கையர்கள் கழிவுகள் மற்றும் ஊக்குவிப்புகளுடன் தமது ஸ்மார்ட் போன்கள் தொடர்பில் அறிந்து வைத்திருக்கும் பொருட்டும் வசதியாக அமைந்துள்ளன.

2019 ஆம் ஆண்டில், BrandZ இன் உலகின் பெறுமதி வாய்ந்த உலகளாவிய வர்த்தகநாமங்கள் 100 இன் பட்டியலில் Huawei 47 ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளதுடன், Forbes சஞ்சிகையின்  உலகின் பெறுமதி வாய்ந்த வர்த்தகநாமங்களின் பட்டியலில் 79 ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டது. இதனோடு, Brand Finance இன் மிகவும் பெறுமதி வாய்ந்த உலகளாவிய 500 நிறுவனங்களைக் கொண்ட பட்டியலில் 25 ஆவது இடத்தை தனதாக்கிக் கொண்டது. Interbrandஇன் உலகளாவிய வர்த்தக நாமங்கள் கொண்ட பட்டியலில் 68 ஆவது இடத்தை Huawei பெற்றுக்கொண்டது. மேலும், Fortune’s Global 500 பட்டியலில் 61 ஆவது இடத்தையும் Huawei தனதாக்கியுள்ளது. 


Add new comment

Or log in with...