க.பொ.த. (சா/த) மோசடி; விசாரணை CID யிடம்

 

அநுராதபுரம் மற்றும் நாராஹேன்பிட்டி பகுதியிலுள்ள பாடசாலைகளில் கையடக்க தொலைபேசியை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட பரீட்சை மோசடி விசாரணை, பொலிஸ் குற்ற புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நேற்று (18) இடம்பெற்ற க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையின் கணித பாட பரீட்சையின் போதே குறித்த முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

கொழும்பின் நாராஹேன்பிட்ட பகுதியிலுள்ள பாடசாலையில் பரீட்சை எழுதிய தனிப்பட்ட பரீட்சார்த்தி தொலைபேசி அழைப்பின் மூலம் பரீட்சை உதவிகளை பெற்றுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் அநுராதபுரம், வலிசிங்ஹ ஹரிஸ்சந்த்ர பரீட்சை மண்டபத்தில் பரீட்சை எழுதிய பாடசாலை மாணவன் ஒருவர், தனது கையடக்க தொலைபேசியை பயன்படுத்தி வைபர் (Viber) செயலியின் மூலம் பரீட்சை எழுத முயன்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மாணவனின் பரீட்சை பத்திரம் மற்றும் கையடக்க தொலைபேசி என்பன பொலிஸார் கையகப்படுத்தியுள்ளதாக பொலிஸ் ஊடக மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

அத்துடன் இம்மாணவனுக்கு ஏனைய பாடங்களுக்கான பரீட்சைகளுக்கு முகம்கொடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 


Add new comment

Or log in with...