ஊழியர்களிடம் மறைந்திருந்த திறமைகளை வெளிகொணர்ந்த Hemas Got Talent இசை நிகழ்ச்சி

இலங்கையில் சிறந்த சுகாதார சேவைகளை வழங்கும் வலையமைப்பைக் கொண்ட முன்னணி வைத்தியசாலையான ஹேமாஸ் வைத்தியசாலை தமது ஊழியர்களிடம் மறைந்திருந்த திறமைகளை வெளிக்கொண்டுவரும் முகமாக ஹேமாஸ் கொட் டெலன்ட் இசை நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தியுள்ளது. ஹேமாஸின் விருது வழங்கும் இரவு நேர நிகழ்விற்கு இணையபக இடம்பெற்ற இந்த இசை நிகழ்ச்சியானது பொரலஸ்கமுவையில் அமைந்துள்ள கோல்டன் ரோஸ் ஹோட்டலில் நடைபெற்றது.

இந்த இசை நிகழ்ச்சிக்காக 25 அம்சங்கள் உள்ளடக்கப்பட்டதுடன் வத்தளை மற்றும் தலவத்துகொடை ஹேமாஸ் வைத்தியசாலையில் கடமை பு​ரியும் ஊழியர்கள், ஹேமாஸ் இரசாயனகூட வலையமைப்பு ஊழியர்கள் உட்பட 500 பேர் கலந்துகொண்டனர்.

ஹேமாஸ் வைத்தயிசாலை மற்றும் இரசாயனக் கூட வலையமைப்பின் மனித வளப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த இசை நிகழ்ச்சிக்காக நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஸ்டீவன் என்டர்பி, ஹேமாஸ் வைத்தியசாலை மற்றும் இரசாயனக் கூட வலையமைப்பின் தலைவர், ஹேமாஸ் ஹோல்டிங்ஸின் பணிப்பாளர் சபை, ஹேமாஸ் வைத்தியசாலை மற்றும் இரசாயனக் கூட வலையமைப்பின் முகாமைத்துவப் பணிப்பாளர் மற்றும் தனியாா் வைத்தியசாலை மற்றும் வைத்திய பராமரிப்பு இல்ல சங்கத்தின் தலைவர் பேராசிரியர் லக்கித் பீரிஸ் உட்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

முழு இசை நிகழ்ச்சியின் போதும் தமது பூரண திறமைகளைக் காட்டி அந்த இரவு முழுவதும் அனைவரையும் சந்தோஷத்தில் ஆழ்த்தியமை மகிழ்ச்சியான தருணமென அதில் கலந்து கொண்ட பேராசிரியர் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

“அதுமட்டுமன்றி இந்த யதார்த்தமான இசை நிகழ்ச்சியை ஒழுங்கமைப்பதற்கு பாடுபட்டு உழைத்த அனைவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அத்துடன் உங்களது இடைவிடாத முயற்சிகளுக்காகவும் நான் எனது நன்றிகளை கூறிக்கொள்வதோடு இவ்வாறான இசை நிகழ்ச்சிகளை நடத்துவதன் மூலம் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதற்கும் ஒரு சந்தா்ப்பமாக அமையுமெனவும் நான் கூறிக்கொள்ள விரும்புகிறேன்” என அவர் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...