பிரியங்கர ஜயரத்ன வழக்கிலிருந்து விடுதலை

பிரியங்கர ஜயரத்ன வழக்கிலிருந்து விடுதலை-Priyankara Jayaratne Released from Case

முன்னாள் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பியங்கர ஜயரத்னவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

இன்று கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன இவ்வுத்தரவை வழங்கினார்.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு குறித்த வழக்கை வாபஸ் செய்ததையடுத்து, இவ்வாறு அவர் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2014 மே 21ஆம் திகதி, பிரதிவாதி பியங்கரா ஜயரத்ன சிவில் விமான அமைச்சராக பணியாற்றியபோது, ​​கம்பத கேட்டர்ஸ் எனும் நிறுவனத்திற்கு ரூ. 330,000 பணத்தை செலுத்துமாறு, ஶ்ரீ லங்கன் கேட்டர்ஸ் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரியை பணித்ததன் மூலம் இலஞ்சம் ஊழல் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் அவர் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இவழக்கு இன்று (03) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குறித்த வழக்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் மூன்று ஆணையாளர்களின் எழுத்து மூல அனுமதியின்றி பதிவு செய்யப்பட்டுள்ளதால், மீள வழக்கை பதிவு செய்தல் அடிப்படையில் அவ்வழக்கை வாபஸ் பெற அனுமதி கோருவதாக, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்தார்.

இதனை ஏற்றுக் கொண்ட மேல் நீதிமன்ற நீதிபதி, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் குற்றச்சாட்டுகளை வாபஸ் பெற அனுமதித்தோடு, குற்றம் சாட்டப்பட்ட பியங்கர ஜயரத்னவை வழக்கிலிருந்து விடுதலை செய்வதாக அறிவித்தார்.

ஆயினும் குறித்த வழக்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் மீண்டும் உரிய முறையில் பதிவு செய்யப்படும் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...