தம்மையும் விடுவிக்குமாறு மரண தண்டனை கைதிகள் போராட்டம்

தம்மையும் விடுவிக்குமாறு மரண தண்டனை கைதிகள் போராட்டம்-2 Inmates on Welikda Roof Top-Protest

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள இரண்டு கைதிகள் சிறைச்சாலை கூரையின் மேல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தங்களுக்கும் ஜனாதிபதியின் பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரோயல் பார்க் சம்பவ கொலை குற்றவாளிக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்க முடியுமென்றால், தங்களுக்கும், ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என, அவர்கள் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

2005 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ரோயல் பார்க் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஜூட் ஷ்ரமந்த அந்தோனி ஜயமஹா என்பவருக்கு, ஜனாதிபதி கடந்த சனிக்கிழமை (09) பொது மன்னிப்பில் விடுவிக்கப்பட்டார்.

19 வயதான ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த யுவோன் ஜோன்சன் கடந்த 2005 ஜூலை 01 ஆம் திகதி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஷ்ரமந்த ஜயமஹா குற்றவாளியாக தீர்ப்பு வழங்கப்பட்டது.

2012 இல், மேன்முறையீட்டு நீதிமன்றம் ஷ்ரமந்த ஜயமஹா மீதான தண்டனையை 12 ஆண்டுகளிலிருந்து மரண தண்டனையாக  மாற்றம் செய்தது.

ஒக்டோபரில் 2013இல் ஷ்ரமந்த ஜயமஹாவுக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...