விதைத்தலுக்கு உதவும் மஹிந்திரா ட்ரக்டர் சேர்விஸ்

இலங்கையிலுள்ள சகல விவசாய சமூகத்துக்கும் சகல விதத்திலும் உதவிவரும் Diesel & Motor Engineering PLC (DIMO) நிறுவனத்தின் விவசாய இயந்திரப் பிரிவு விவசாய சமூகத்துக்கு நாடு முழுவதிலும் எவ்வித கட்டணமும் அறவிடாமல் இலவசமாக மஹிந்திரா ட்ரக்டர் சேர்விஸ் முகாமை நடத்தியிருந்தது. போகத்தில் வெற்றிபெற - இன்றே தயாராகுங்கள் என்ற தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்ட இந்த சேர்விஸ் முகாமின் ஊடாக, மஹிந்திரா ட்ரக்டர்களைக் கொண்டுள்ள உரிமையாளர்கள் மற்றும் விவசாய சமூகத்தினரை விதைப்புக்குத் தயாராக்கும் நோக்கில் ட்ரக்டர்களில் காணப்பட்ட குறைபாடுகள் நிவர்த்திசெய்யப்பட்டன. DIMO நிறுவனத்தின் விவசாய இயந்திரப் பிரிவு 30வருடங்களுக்கு மேலாக இலங்கையில் மஹிந்திரா ட்ரக்டர்களுக்கான தனித்துவமான விநியோகஸ்த நிறுவனமாக செயற்பட்டு வருகிறது.  

”இலங்கையின் முக்கியமான சமூகப் பிரிவு மற்றும் ஸ்திரமான பொருளாதார செயற்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்துவது என்ற முயற்சியின் ஒரு பகுதியாக இந்த முகாம் அமைந்தது. விதைப்புக்குத் தயாராவதில் விவசாய சமூகத்தினர் மஹிந்திரா ட்ரக்டரில் அதிகமாகத் தங்கியிருக்கின்றனர். சில விவசாயிகள் ட்ரக்டர்களின் உரிமையாளர்களாக இருப்பதுடன், பெரும் பகுதியானவர்கள் விதைப்புக்கான நிலத்தை தயார்ப்படுத்த ட்ரக்டர்களை வாடகைக்கு அமர்த்திக் கொள்கின்றனர். விதைப்புக்கான காலப் பகுதியில் மஹிந்திரா ட்ரக்டர்களுக்கு அதிக கிராக்கி காணப்படுவதுடன், ஏறத்தாழ 300முதல் 400மணித்தியாலங்கள் இவை பயன்படுத்தப்படுகின்றன. பழுநிறைந்த வேலைச் சூழலில் தமக்கான தயார்ப்படுத்தலின்போது ட்ரக்டர்களை சேர்விஸ் செய்வது மிகவும் முக்கியமானதாகும். கனரக இயந்திரங்களை சேர்விஸ் செய்வதற்கு விஞ்ஞான மற்றும் நிபுணத்துவ அறிவு அவசியமாகும்.” என DIMO நிறுவனத்தின் விவசாய இயந்திர விற்பனை திணைக்களத்தின் பொது முகாமையாளர் அமில.டி.சில்வா தெரிவித்தார். 

நாடு முழுவதிலும் உள்ள தெரிவுசெய்யப்பட் 105 இடங்களில் 35 நாட்கள் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டதுடன், இதில் 1,800ற்கும் அதிகமான ட்ரக்டர்கள் சேர்விஸ் செய்யப்பட்டன. தகுதிபெற்ற 10 தொழில்நுட்பவியலாளர்கள் மற்றும் உதவியாளர்களுடன் கூடிய குழுவொன்றின் ஊடாக ஒவ்வொரு இடத்திலும் சேவையை வழங்குவதற்கான ஏற்பாடுகளை DIMO வின் விவசாய இயந்திரப் பிரிவு முன்னெடுத்திருந்தது.   


Add new comment

Or log in with...