நுரைச்சோலை மின்னுற்பத்தி முழுமையாக நிறுத்தம்?

புத்தளம் நுரைச்சோலை அனல் மின் நிலைய மின்உற்பத்தி பணிகள் முழுமையாக நிறுத்தப்படவுள்ளதாக வெளியாகும் செய்தியை மின்வலு எரிசக்தி அமைச்சு மறுத்துள்ளது. 

மூன்று இயந்திரங்களில் ஒன்று பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தி வைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 

இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள மின்வலு எரிசக்தி அமைச்சு தலா 300 மெகாவோர்ட் உற்பத்தி செய்யும் 3 மின்உற்பத்தி இயந்திரங்களினூடாக 900 மெகாவோர்ட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. முதலாவது இயந்திரத்தின் ஏ வகை பராமரிப்பிற்காக 4 முதல் 6 வருட காலத்திலும் பீ வகை பராமரிப்பு 3 முதல் 4 வருட காலத்திலும் சீ வகை பராமரிப்பு ஏ,பீ வகை பராமரிப்பு நடைபெறாத காலப்பகுதியில் நடவடிக்கை கால அடிப்படையில் செயற்படுத்த வேண்டும். இதன் பிரகாரம் ஏ வகை பராமரிப்பு 2016 பெப்ரவரியில் இடம் பெற்றதால் பீ வகை பராமரிப்பு தற்பொழுது இடம்பெற உள்ளது. இதற்கு 75 நாட்கள் பிடிக்கும் எனவும் அமைச்சு கூறியது.

2019 ஒக்டோபர் மாத நடுப்பகுதியில் முதலாவது இயந்திர மின்உற்பத்தி பணிகள் நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணிகள் இடம்பெறும். மழையுடன் கூடிய காலநிலை காரணமாக நீர்தேக்கங்களின் நீர்மட்டம் உச்ச அளவை அடைந்துள்ளதால் இது பராமரிப்பு உகந்த காலம் எனவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.(பா)   


Add new comment

Or log in with...