மின்தூக்கியில் சிக்கிய பாப்பரசர் மீட்பு

பாப்பரசர் பிரான்சிஸ் தனது வாராந்த ஆராதனைக்கு செல்லும் வழியில் 25 நிமிடங்கள் மின்தூக்கியில் சிக்கிய நிலையில் தீயணைப்பு படையினரால் மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் நகரின், புனித பீட்டர்ஸ் சதுக்கத்தில் நடைபெற்ற இந்த ஆராதனைக்கு தாமதமாக வந்ததற்காக ஒன்றுகூடி இருந்தவர்களிடம் பாப்பரசர் மன்னிப்புக் கோட்டுக்கொண்டார்.

அங்கு அவர் உரை நிகழ்த்தும்போது, “அன்புக்குரிய சகோதர, சகோதரிகளுக்கு காலை வணக்கம். தாமதத்திற்காக முதலில் நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். எதிர்பாராத நிகழ்வு ஒன்றாக நான் 25 நிமிடங்கள் மின்தூக்கியில் சிக்கி இருந்தேன்” என்று குறிப்பிட்டார். தம்மை மீட்ட தீயணைப்பு வீரர்களுக்காக கரகோசம் இடும்படியும் பாப்பரசர் கூட்டத்தினரிடம் கேட்டுக்கொண்டார். மின்சாரம் துண்டிப்பால் மின்தூக்கி நின்றதாகவும் பாப்பரசர் இதன்போது கூறினார்.


Add new comment

Or log in with...