AMW டயர் வாடிக்கையாளர்களுக்கு Ceylinco இலவச காப்புறுதி

AMW டயர் வாடிக்கையாளர்களுக்கு Ceylinco இலவச காப்புறுதி-Ceylinco Insurance Cover for AMW Tyre Customers

AMW மற்றும் Ceylinco General Insurance இணைந்து முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் பாவனையாளருக்கு பாதுகாப்பு 

உலகத்தரம் வாய்ந்த மோட்டார் வாகன வர்த்தகநாமங்களை இலங்கையில் வழங்குவதில் முன்னிலை வகித்து வருகின்ற நிறுவனங்களுள் ஒன்றாகத் திகழ்ந்து வருகின்ற Associated Motorways (AMW), தனது வாடிக்கையாளர்களின் பாதுகாப்பினை மேம்படுத்தும் ஒரு முயற்சியாக Ceylinco General Insurance நிறுவனத்துடன் ஏற்படுத்திக் கொண்டுள்ள புதிய பங்குடமை தொடர்பில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் கீழ், தமது மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டி மற்றும் ஸ்கூட்டர்களுக்கு AMW டயர்களைக் கொள்வனவு செய்கின்ற அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இலவச காப்புறுதித் திட்டமொன்றை வழங்க அது முன்வந்துள்ளது.

AMW டயர் வாடிக்கையாளர்களுக்கு Ceylinco இலவச காப்புறுதி-Ceylinco Insurance Cover for AMW Tyre Customers

புதிய AMW டயர் உற்பத்தி வரிசையிடமிருந்து கிடைக்கப்பெறுகின்ற பாதுகாப்பினை இப்பங்குடமையானது மேலும் மேம்படுத்துவதுடன், இப்புதிய டயர்களைக் கொள்வனவு செய்கின்ற அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் ஒரு வருடம் வரையான காலப்பகுதிக்கு ரூபா 250,000 தொகை கொண்ட இலவச தனிப்பட்ட விபத்து காப்புறுதித் திட்டத்தை அவர்களுக்கு வழங்கி, அவர்களின் நலனில் அக்கறை செலுத்துகின்றது.

24 மணி நேர தனிப்பட்ட விபத்து காப்புறுதித் திட்டமாக இது அமைந்துள்ளதுடன் இறப்பு அல்லது ஒட்டுமொத்த நிரந்தர அங்கவீனத்திற்கு எதிரான காப்பீட்டை இத்திட்டம் கொண்டுள்ளது.

இதனை அறிமுகப்படுத்தி வைக்கும் முகமாக இடம்பெற்ற நிகழ்வில், AMW நிறுவனத்தின் சார்பில் அதன் முகாமைத்துவப் பணிப்பாளரான பிரண்டன் மொறிஸ், உற்பத்தித்துறை பணிப்பாளரான லசந்த விஜேவீர மற்றும் பணிப்பாளர் சபை அதிகாரிகளும், Ceylinco General Insurance நிறுவனத்தின் சார்பில் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளரான உபாலி விதாரண, பொது முகாமையாளரான ரொ~hன் ரணசிங்க மற்றும் ஏனைய முகாமைத்துவ அணி அங்கத்தவர்கள் பலரும் கலந்து சிறப்பித்துள்ளனர்.

AMW டயர் வாடிக்கையாளர்களுக்கு Ceylinco இலவச காப்புறுதி-Ceylinco Insurance Cover for AMW Tyre Customers

AMW Mor-Max மோட்டார் சைக்கிள் டயர்கள், Epic Hi-Max முச்சக்கர வண்டி டயர்கள் மற்றும் Epic Ray-Max ஸ்கூட்டர் டயர்கள் ஆகிய மூன்று வகையான AMW டயர் வர்த்தகநாமங்களுக்கும் இத்திட்டம் கிடைக்கப்பெறுவதுடன், நாடளாவியரீதியிலுள்ள AMW விற்பனை மையங்கள் மற்றும் முகவர்கள் வலையமைப்பினூடாக அவை கிடைக்கப்பெறுகின்றன.

எந்த வீதி நிலைமைகளின் போதும் சிறந்த அளவில் பற்றிப் பிடிக்கும் தன்மையை உறுதி செய்து, பிரேக் தடுப்பினை பிரயோகிக்கும் போது சிறந்த வகையில் செயல்படுகின்ற வகையில் பாதுகாப்பு மட்டங்களை மேம்படுத்தும் விதத்தில் மூன்று வகையான டயர் வர்த்தகநாமங்களும் நவீன போக்கிலான வடிவமைப்பைக் கொண்டுள்ளன. தலைசிறந்த கட்டுப்பாடு, உறுதிப்பாடு மற்றும் சிறந்த உறுதித்தன்மையையும் கொண்டுள்ளன.

டயர்கள் கொண்டுள்ள குறைந்தளவிலான உருளல் தடுப்பு சிறப்பம்சமானது எரிபொருள் விரயமாவதைக் குறைப்பதுடன், கிலோ மீற்றருக்கான இயக்கும் செலவைக் குறைத்துக் கொள்ள உதவுகின்றது.

ISO 9001:2008 தர முகாமைத்துவ முறைமை, ISO 14001:2004 சுற்றுச்சூழல் முகாமைத்துவ முறைமை மற்றும் நடைமுறை இணக்கப்பாட்டிற்கான EU REACH சான்று அங்கீகாரம் அடங்கலாக, சர்வதேச தரச் சான்று அங்கீகாரங்களுடன் களுத்துறையில் அமைந்துள்ள AMW இன் அதிநவீன தொழிற்சாலை வளாகத்தில் டயர்கள் அனைத்தும் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இப்பங்குடமை தொடர்பில் AMW நிறுவனத்தின் உற்பத்தித் துறை பணிப்பாளரான லசந்த விஜேவீர அவர்கள் கருத்து வெளியிடுகையில், “ஒவ்வொரு ஆண்டும் எமது நாட்டில் இடம்பெறுகின்ற விபத்துக்களின் எண்ணிக்கையை நாம் எடுத்துப் பார்ப்போமாயின், அவற்றில் பெரும்பாலானவை முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்கள் சம்பந்தமானவை என்பதை புள்ளி விபரங்கள் வெளிப்படுத்தியுள்ளன.

பொது மக்களைப் பொறுத்தவரையில் இது பிரதான போக்குவரத்து வழிமுறையாக காணப்படுவதுடன், இந்த வாகனங்களின் பாதுகாப்பினை மேம்படுத்துவில் போதிய கவனம் செலுத்தப்படுவதில்லை. இலங்கையில் காப்புறுதிச் சந்தையில் முன்னணி நிறுவனமாகத் திகழ்ந்து வருகின்ற Ceylinco General Insurance உடன் ஏற்படுத்தப்பட்டுள்ள இப்பங்குடமையானது, இந்த வாடிக்கையாளர்களது அன்றாட வாழ்வில் ஒரு முழுமையான காப்புறுதித் திட்டத்துடன் பாதுகாப்பினை வழங்கவுள்ளது.

AMW டயர்களின் உதவியுடன் மேற்குறிப்பிட்ட வகையான வாகனங்களை பயன்படுத்துபவர்கள், பாதுகாப்பான பிரயாணத்தை அனுபவித்து மகிழ்வர் என நாம் நம்புவதுடன், விபத்துக்களின் ஆபத்துக்களைக் கட்டுப்படுத்துவதை சிந்தனையில் கொண்டவாறு AMW டயர்கள் விசேட பாதுகாப்பு அம்சத்துடன் வடிவமைக்கப்படுகின்றன,” என்று குறிப்பிட்டார்.

வாடிக்கையாளர்களின் நலன் தொடர்பில் AMW அக்கறை கொண்டுள்ளதாகவும், வெறுமனே விற்பனை என்பதற்கும் அப்பால் அவர்களுக்கு பல்வேறு சேவைகள் மற்றும் உதவிகளை வழங்கி வருவதாகவும் குறிப்பிட்டார்.

“AMW போன்ற நிபுணத்துவம் கொண்ட பெரும் நிறுவனம் ஒன்றின் பக்கபலத்துடன் உயர் தரமான உற்பத்திகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் இலங்கையின் முன்னணி காப்புறுதி பெரு நிறுவனமான  Ceylinco General Insurance உடன் இணைப்பினை ஏற்படுத்துதல் ஆகியவற்றினூடாக, பெறுமதிமிக்க எமது வாடிக்கையாளர்கள் தமது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பிரயாணம் செய்யும் வேளைகளில் சாத்தியமான அதிகபட்ச அக்கறையை அவர்கள் பெற்றுக்கொள்வதற்கான தளமேடை ஒன்றை நாம் ஏற்படுத்தியுள்ளோம்,” என்று அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டார்.

1949 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட AMW நிறுவனம், கடந்த 70 ஆண்டுகளில் தொடர்ச்சியாக வளர்ச்சி கண்டு, இலங்கையிலுள்ள பெருமதிப்பிற்குரிய கூட்டாண்மை நிறுவனங்களில் ஒன்றாக மாறியுள்ளது.

Yamaha, Nissan, Suzuki, Renault மற்றும் Piaggio அடங்கலாக, உலகத்தரம் வாய்ந்த வர்த்தகநாமங்களை AMW வழங்குவதுடன், இதனுடன் தொடர்புபட்ட ஏனைய உற்பத்திகளான Sonax கார் பேணல் பராமரிப்பு உற்பத்தி வரிசை, Castrol மசகு எண்ணெய் வகை மற்றும் New Holland டிராக்டர்களையும் அது வழங்கி வருகின்றது.

நாடளாவியரீதியில் அதிசிறந்த விற்பனைக்குப் பின்னரான சேவை மற்றும் உதிரிப்பாகங்களை அது வழங்கி வருவதுடன், AMW Capital Leasing மூலமாக நிதியியல் தீர்வுகளையும் வழங்கி வருகின்றது.

இலங்கையில் ஏற்கனவே AMW வாடிக்கையாளர்கள் கொண்டுள்ள வாகனங்களுக்கு நம்பகமான சேவைகளை AMW Automall வழங்கி வருகின்றது. 2008 ஆம் ஆண்டில் ஐக்கிய அரபு இராச்சியத்திலுள்ள மிகப் பாரிய கூட்டாண்மை நிறுவனங்களில் ஒன்றான Al-Futtaim Group  இன் பூரண உரிமையாண்மையின் கீழான ஒரு துணை நிறுவனமான Al-Futtaim Engineering (AFE) இன் முகாமைத்துவ நிபுணத்தின் கீழ் AMW கொண்டு வரப்பட்டது.

மோட்டார் வாகனங்கள், இலத்திரனியல் பொருட்கள், காப்புறுதி, சேவைகள், அசைவற்ற ஆதன இருப்பு மற்றும் வெளிநாட்டு தொழிற்பாடுகளில் பல்வேறுபட்ட செயற்பாடுகளுடன், ஒருங்கிணைக்கப்பட்ட வர்த்தக, கைத்தொழில் மற்றும் சேவைகள் நிறுவனமாக  Al- Futtaim Group திகழ்ந்து வருகின்றது. 


Add new comment

Or log in with...