இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்கவின் பதவிக் காலம் நீடிப்பு

 

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்கவின் பதவிக் காலம் ஒரு வருடத்தால் நீடிக்கப்பட்டுள்ளது.

முப்படைகளின் தளபதியான, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்கவின் பதவிக் காலம் எதிர்வரும் ஓகஸ்ட் 19 ஆம் திகதி நிறைவடையவிருந்த நிலையில் 2019 ஓகஸ்ட் 19 ஆம் திகதி வரையான மேலும் ஒரு வருடத்திற்கு அவரது பதவிக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

லெப்டினன்ட் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க, இலங்கையின் 22 ஆவது இராணுவத்தளபதியாக கடந்த வருடம் (2017) ஜூன் 27 ஆம் திகதி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...