வெகுஜன ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார வெகுஜன ஊடக பதில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.அரசாங்க தகவல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன வெளிநாடு சென்றுள்ளதன் காரணமாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.