சிம்பாப்வேயில் முதல்முறை நடைபெறவுள்ள சிம் அப்ரோ டி10 லீக் தொடரில் இலங்கையின் ஐந்து வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்த தொடருக்கான அணிகளில் இடம்பெற்றுள்ள வீரர்கள் விபரம் கடந்த திங்கட்கிழமை (03) உறுதி செய்யப்பட்டது. ஒவ்வொரு அணியும் குறைந்து ஆறு சிம்பாப்வே வீரர்களுடன் குறைந்தது 16 வீரர்களை தேர்வு செய்துள்ளன.
இந்தத் தொடரில் ஐந்து அணிகள் இடம்பெற்றிருப்பதோடு இதில் சாம்ப் ஆமி அணியில் மஹீஷ் தீக்ஷன, பானுக்க ராஜபக்ஷ மற்றும் சாமிக்க கருணாரத்ன ஆகிய மூன்று இலங்கை வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அதேபோன்று ஹராரே ஹரிகன்ஸ் அணியில் கெவின் கோத்திகொடவும் புலவாயோ பிரேவ்ஸ் அணியில் திசர பெரேராவும் இடம்பெற்றுள்ளனர்.
இந்த டி10 தொடர் வரும் 20 ஆம் திகதி தொடக்கம் ஜூலை 29 ஆம் திகதி வரை ஹராரேவில் நடைபெறவுள்ளது.
Add new comment