யாழ். நகரில் டெங்கு தீவிரம் சுகாதாரத் தரப்பு எச்சரிக்கை

1,491 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு

யாழ் மாவட்டத்தில் 1,491 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்தார். வடமாகாண சுகாதார  சேவை திணைக்களத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலே, மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.

வடமாகாணத்தில் கடந்த ஆறு மாதங்களில் ஆயிரத்து 843 பேர் டெங்கு நோயாளிகளாக இனங்காணப்பட்டுள்ளனர்.

யாழ். மாவட்டத்தில் ஆயிரத்து 491 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 65 பேரும், மன்னார் மாவட்டத்தில் 77 பேரும், வவுனியா மாவட்டத்தில் 106 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 104 பேருமாக ஆயிரத்து 843 பேர் டெங்கு நோய்க்குள்ளாகியுள்ளனர்.

வடமாகாணத்தின் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் யாழ்ப்பாண மாவட்டத்திலேயே அதிகளவில் டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்.மாவட்டத்தில், யாழ்.நகர பகுதி, நல்லூர், கரவெட்டி ஆகிய பகுதிகளில், டெங்கு தாக்கம் அதிகளவில் காணப்படுகின்றது.

எனவே, டெங்கு தொற்றை தவிர்ப்பதற்கு பொதுமக்கள் தமது சுற்றாடலை சுத்தமாக வைத்திருந்து பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென தெரிவித்தார்.

 

 

(யாழ். விசேட நிருபர்)


Add new comment

Or log in with...