இந்தியாவின் ஆந்திர மாநில முதலமைச்சர் ஜகன்மோகன் ரெட்டியை, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சந்தித்து கலந்துரையாடினார். இருநாடுகளுக்குமிடையிலான நட்புறவை வலுப்படுத்துவது, கரும்பு, மிளகாய், விவசாய மற்றும் மருந்துகள் உற்பத்தி நிறுவனம் அமைப்பது குறித்தும் இருவரும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
இலங்கையிலுள்ள திருப்பதி திருமலை பக்தர்கள் வயது மூப்பு காரணமாக திருப்பதிக்கு பயணம் செய்ய முடியாதுள்ளனர். இவர்களின் வசதிக்காக
இலங்கையில் திருப்பதி திருமலை கோவில் அமைக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இக்கோரிக்கைக்கு சாதகமான பதிலை ஆந்திர முதலமைச்சர் வழங்கினார். இச்சந்திப்பில் ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு விருதி வழங்கி கெளரவிக்கப்பட்டது.
இச்சந்திப்பில் இலங்கைக்கான இந்திய துணைத் தூதர் டாக்டர். வெங்கடேஷ் மற்றும் இலங்கையின் அலுவலர்கள் பங்கேற்றனர்.
Add new comment