பிலிப்பைன்ஸுடன் இந்தியா ஒத்துழைப்பு

விஞ்ஞானம், தொழில்நுட்பம், விவசாயம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல துறைகளில் ஒத்துழைப்புடன் செயற்படுவது குறித்து இந்தியாவும் பிலிப்பைன்ஸும் கவனம் செலுத்தியுள்ளன. இரு தரப்பு ஒத்துழைப்புக்கான இந்திய மற்றும் பிலிப்பைன்ஸ் கூட்டு ஆணைக்குழுவின் கூட்டத்தின் போது இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இக்கூட்டு ஆணைக்குழுவின் கூட்டம் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், பிலிப்பைன்ஸ் வெளிவிவகார செயலாளர் என்ரிக் மனலோ ஆகியோரின் இணைத்தலைமையில் நடைபெற்றுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையில் தூதரக ரீதியிலான இராஜதந்திர உறவு ஆரம்பிக்கப்பட்டு 75 ஆவது வருட நிறைவு கொண்டாடப்படும் இச்சூழலில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பல துறைகளில் ஒத்துழைப்புடன் செயற்படுவது குறித்து இரு தரப்பினரும் கருத்துப் பரிமாறல்களை மேற்கொண்டுள்ளனர்.


Add new comment

Or log in with...