யங் ஸ்டார் சம்பியன்

அக்கரைப்பற்று ஏஸ் விளையாட்டுக் கழகத்தின் ஆதரவில் அக்கரைப்பற்று உதைபந்தாட்ட சம்மேளனம் நடாத்திய ‘கோல் காப்பாளர் மர்ஹூம் என்.ரீ. பாறூக் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ண’ உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் ஏறாவூர் யங் ஸ்டார் விளையாட்டு கழகம் சம்பியனானது.

அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்த 16 முன்னனி உதைபந்தாட்ட அணிகள் கலந்து கொண்ட இத்தொடரின் இறுதிப்போட்டி அக்கரைப்பற்று பொது விளையாட்டு மைதானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (30) நடைபெற்றது. இதில் அக்கரைப்பற்று சூ சுற்றி அணியை எதிர்கொண்ட யங் ஸ்டார் கழகம் 5–1 என்ற கோல் கணக்கில இலகு வெற்றியீட்டியது. இத்தொடரின் சிறந்த வீரராக யங் ஸ்டார் அணியின் முஹம்மட் முஸ்தாக் தெரிவு செய்யப்பட்டார்.


Add new comment

Or log in with...